இங்க தான் இப்படின்னா.. அங்கயும் அப்படிதான்னா.. 18,000 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பும் Deutsche Bank!

ஃப்ராங்க் ஃபர்ட் : இந்தியாவில் தான் பொருளாதார பிரச்சனை வேலையிழப்பு, நீக்கம் என்ற குழப்பமெனில் சர்வதேச அளவிலும் இதே குழப்பம் தான். அட ஆமாங்க சர்வதேச வங்கியான "Deutsche Bank" வங்கியில் 18,000 பேரை வேலையிலிருந்து நீக்கப்போவதாக அந்த வங்கி அறிவித்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த ஃப்ராங்க் ஃபர்ட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கியான, இந்த சர்வதேச வங்கி தான் "Deutsche Bank". இந்த சர்வதேச வங்கி வரும் 2022க்குள் 18,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாம்.

ஆமாங்க.. அதன் வணிக பிரிவான முதலீட்டு வங்கி பிரிவை, மறு சீரமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வாறு மறு சீரமைப்பதன் மூலம் நிலையான வருமானத்தை பெற முடியும் என்றும் இந்த வங்கி அறிவித்துள்ளது.

வர்த்தக வங்கியை கைவிடுவதன் மூலம் லாபமே?

வர்த்தக வங்கியை கைவிடுவதன் மூலம் லாபமே?

ஒரு புறம் இந்த வர்த்தக வங்கி மூலம் செயல்படும் ஸ்டாக் வர்த்தகத்தை நிறுத்துவதன் மூலம் நிறைய செலவுகள் மிச்சமாகும் என்றும் இந்த வங்கி அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த வர்த்தக வங்கியை நிறுத்துவதன் மூலம், இந்த வங்கிக்கு பல மடங்கு நஷ்டம் குறையும் என்றும் இந்த வங்கி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் மொத்த செலவு 22.8 பில்லியன் யூரோக்கள் செலவாகியுள்ளதும், இதற்கு முன்பு 17 பில்லியன் யூரோக்கள் செலவாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முதலீடுகளை பெற கவனம் செலுத்துவதே நோக்கம்?

முதலீடுகளை பெற கவனம் செலுத்துவதே நோக்கம்?

ஒரு புறம் நிலையான வருமானம், பெறவும், இதற்காக நல்ல கார்பரேட் முதலீட்டாளர்களை பெறவும் இந்த வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. எனினும் அனாவசிய செலவுகளை அதே நேரத்தில் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது இந்த வங்கி. ஆக செலவினங்களை குறைக்கும் போது, இலாபம் அதிகரிக்கா விட்டாலும் நஷ்டம் குறையும் என்பதே இந்த வங்கியின் திட்டம் போல?

அடிக்கடி ஒழுங்குமுறை அபராதம்?

அடிக்கடி ஒழுங்குமுறை அபராதம்?

கடந்த சில ஆண்டுகளாகவே ஒழுங்குமுறை அபராதம் மற்றும் அபராதம், பலவீனமான இலாபம், அதிக செலவினங்கள் மற்றும் பங்கு விலை வீழ்ச்சியுடன் இந்த வங்கி போராடி வருகிறது. குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் 341 மில்லியன் யூரோக்களை நேர்மறையான வருவாயை பதிவு செய்தது. எனினும் இந்த வங்கியின் தலைமை நிரிவாக அதிகாரி கிறிஸ்டியன் பொறுப்பேற்றபின்னறெ இந்த விரைவான மறுசீரமைப்புக்கு உறுதியளித்துள்ளார்.

பின்னரே இந்த லே ஆஃப் முடிவு?

பின்னரே இந்த லே ஆஃப் முடிவு?

ஒரு புறம் பல கட்டமாக ஆராய்ந்தே இந்த வங்கி இந்த முடிவை எடுத்திருத்திருபாதாகவும், அதிலும் காமர்ஸ் வங்கியுடான இணைப்பு தோல்வியில் முடிந்த பின்னரே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகவும் இந்த வங்கி அறிவித்துள்ளது.

பல ஆயிரம் பேர் வேலையிழப்பு?

பல ஆயிரம் பேர் வேலையிழப்பு?

ஒரு புறம் இந்த வங்கி, இவ்வாறு கூறி வந்தாலும், பல வாறு கருதப்படுகின்றது. குறிப்பாக இங்கு வேலை செய்யும் மொத்த 91,500 ஊழியர்களில், 20,000 வேலை விட்டு நீக்கப்போவதாகவும், ஐந்தில் ஒரு ஊழியரை வேலையை விட்டு நீக்கப்போவதாகவும், அதோடு 2022ல் 74,000 ஊழியர்களை குறைக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. எப்படியோ ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்துவிட்டு இந்த வங்கி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+