டெல்லி : தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை என்றாவது ஒரு நாள் தான் வாங்குவோம் என்தால் அது அந்த அளவு மக்களை பாதிக்காது. ஆனால் அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான பெட்ரோல் டீசலுக்கான வரி அதிகரித்திருப்பது நடுத்தர மக்களை இன்னும் பிரச்சனைக்கு தள்ளுவது போல் உள்ளது. இப்படி மக்கள் ஒரு புறம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மறுபுறம் மத்திய அரசின் வருவாய் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே, மத்திய அரசின் இந்த புதிய வரி விதிப்பு திட்டத்தால், அரசுக்கு கூடுதலாக 30,000 கோடி ரூபாய் வருவாய் அதிகரிக்கும் என்றும் கூறியிருப்பது சற்று சர்ச்சையை கிளப்பியுள்ளது என்றே கூறலாம். .
மத்தியில் மோடி தலைமையில், இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள மோடி 2.0 அரசு கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று, தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய நிலையில், புஸ்வானமாய் ஒன்றும் இல்லாமல் போனது தானது தான் மிச்சம்.
பட்ஜெட்டால் ஏமாற்றமே மிஞ்சியது?
ஒரு புறம் நடுத்தர மக்களுக்கு நல்ல ஆதாயமான திட்டம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு, குறிப்பாக நடுத்தர மக்களுக்கு ஏதேனும் சிறப்பு சலுகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக பெட்ரோல் டீசல் மீதான வரிதான் அதிகரித்தது. ஆமாங்க லிட்டருக்கு 1 ரூபாய் வீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. ஒரு புறம் தங்கம் வெள்ளி மீதான வரி அதிகரித்தாலும், அது மக்களை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால் அன்றாடம் உபயோகப்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு, மக்களின் வேதனையை இன்னும் அதிகரிப்பதாய் உள்ளது என்ற கருத்தே நிலவி வருகிறது.
நடுத்தர மக்களுக்கு விலையேற்றமா?
பெரு நிறுவனங்களுக்கு, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வரவு செலவு காட்டும் நிறுவனங்களுக்கு 25 சதவிகிதம் வரி எனவும், இது முன்னர் 250 கோடி ரூபாய் வரை வருமானம் கொண்டோருக்கு மட்டும் 25 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த புதிய வரி திட்டத்தால் அரசுக்கு வருவாய் அதிகரிப்பு நிச்சயம் உண்டு என்பதில் சந்தேகமில்லை என்றும் கூறப்படுகிறது.
இறக்குமதின் வரி அதிகரிப்பு?
ஒரு புறம் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதத்திலிருந்து, 12.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் தங்கம் இறக்குமதியில் முன்னணியில் இருக்கும் இந்தியா, தற்போது அதிகளவிலான வரியால் இறக்குமதி குறையலாம் என்றாலும், அரசுக்கு இதன் மூலம் ஆண்டுக்கு 3000 - 4000 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் இறக்குமதி குறையலாம்?
அதேசமயம் நடப்பு நிதியாண்டில் தங்கம் இறக்குமதி பற்றிய விவரங்களை மத்திய அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நிதியாண்டில் ஏப்ரல் - பிப்ரவரி வரையிலான 10 மாதங்களில் மொத்தம் 29.5 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. ஆனால் இது முன்னர் இதே காலத்தில் 31.2 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தினை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்த நிலையில் இறக்குமதி வரியும் தற்போது அதிகரித்திருப்பதால், நடப்பு ஆண்டில் இறக்குமதி இன்னும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மீதமுள்ள மாதங்களில் ரூ.22.000 கோடி வருமானம்?
இந்த வரி அதிகரிப்பின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கும் 30,000 கோடி ரூபாய் வரை வருமானம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம். இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள ஒன்பது மாதங்களில் கிட்டதட்ட 22,000 கோடி ரூபாய் வரை வருவாய் அதிகரிக்கலாம் எனவும், அதிலும் பணக்காரர்களிடம் இருந்து மட்டும் 12,000 - 13,000 கோடி ரூபாய் வரை வருவாய் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.
வரி அதிகரிப்பால் அதிகரிக்கும் லாபம்?
நிர்மலா சீதாராமன் தாக்கல் பட்ஜெட்டில், 2 - 5 கோடிக்கு இடையில் உள்ள வருமானத்திற்கு வரியாக 15 சதவிகிதத்திலிருந்து, 25 சதவிகிதமாகவும், 5 கோடி மேல் வருவாய் கொண்டவர்களுக்கு வரியை 15 சதவிகிதத்திலிருந்து 37 சதவிகிதமாகவும் விதிக்க முன்மொழிந்தார். எனினும் பெரு நிறுவனங்களுக்காக வரிச்சலுகையால் அரசுக்கு 4000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications