என்னய்யா சொல்றீங்க.. மாருதி சுசூகி பங்கின் விலை ஒரே நாளில் ரூ.332 வீழ்ச்சியா.. என்ன ஆச்சு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், கடந்த சில மாதங்களாகவே தனது விற்பனை மிக குறைந்துள்ளது என்று கூறி வரும் நிலையில், தற்போது உற்பத்தியும் மிக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் இந்த அறிவிப்பால் இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் கிட்டதட்ட 5 சதவிகிதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது.

 

அதோடு இந்த பங்கின் விலை தற்போது (ஜூலை 8, 1.30 மணியளவில்) சுமார் 332 ரூபாய் குறைந்து 6032 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது இப்படி எனில், இந்த பிரச்சனை ஆரம்பத்திலிருந்தே இந்த பங்கின் விலை கிட்டதட்ட 50 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு புறம் அனைத்து ஆட்டோ மொபைல் வாகன உற்பத்தி நிறுவனங்களும், சரிவிலேயே இருந்தாலும், நாட்டின் முக்கிய உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, தனது உற்பத்தியை குறைத்துள்ளதாகவும், அதே நேரத்தில் விற்பனையும் சரிந்துள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியதில் இருந்தே, இந்த நிறுவனத்தின் பங்கு விலை சரிவடைந்து வருகிறது.

மாருதி சுசூகி உற்பத்தி வீழ்ச்சி?

மாருதி சுசூகி உற்பத்தி வீழ்ச்சி?

குறிப்பாக பயணிகள் வாகனம் ஜூன் 2019ல் உற்பத்தி கிட்டதட்ட 15.60 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும், இது தற்போது 1,10,641 வாகனங்களை மட்டுமேம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும், இது முன்னர் இதே காலத்தில் 1,31,068 ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. உற்பத்தி குறைந்துள்ளது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

விற்பனையும் வீழ்ச்சி?

விற்பனையும் வீழ்ச்சி?

ஒரு புறம் உற்பத்தி தான் குறைந்துள்ளது எனில், மறுபுறம் விற்பனையும் படு வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆமாங்க.. கடந்த ஜூன் 2019 வரையிலான காலத்தில் விற்பனை 17.2 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், வெறும் 1,11,014 பயணிகள் வாகனத்தை மட்டும் விற்பனை செய்துள்ளதாம். இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,34,036 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மினி கார்கள் விற்பனை வீழ்ச்சி உற்பத்தியையும் பாதித்தது?
 

மினி கார்கள் விற்பனை வீழ்ச்சி உற்பத்தியையும் பாதித்தது?

இது ஒரு புறம் எனில், மறுபுறம் மினி கார்கள் விற்பனையும் பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக ஜூன் 2019ல் 36.2 சதவிகிதம் குறைந்து, 18,733 வாகனங்களாக விற்பனை குறைந்துள்ளது. இதுவே ஜூன் 2018ல் 29,381 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் எதிரொலிப்பே உற்பத்தியிலும் காணப்பட்டது. குறிப்பாக இந்த சிறிய ரக கார்கள் 48.20 சதவிகிதம் உற்பத்தி குறைந்து, 15.087 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 29,131 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற கார்களுக்கும் இதே நிலை தான்?

மற்ற கார்களுக்கும் இதே நிலை தான்?

இந்த கார்கள் தான் இப்படியெனில், Swift, Dzire, Baleno and WagonR உள்ளிட்ட கார்கள் உற்பத்தியும் 1.46 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 66,436 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளவனவாம். இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 67,426 கார்களாக உற்பத்தி செய்யப்பட்டிருந்தாம். அதேசமயம் இந்த காம்பாக்ட் கார்களின் விற்பனையும் 12.1 சதவிகிதம் விழ்ச்சி கண்டு 62,897 வாகனங்கள் வீழ்ச்சி கண்டுள்ளன. இதுவே இதற்கு முன்னர் 71,570 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் எதிர்பார்ப்பில் ஏமாந்து போன நிறுவனங்கள்?

பட்ஜெட் எதிர்பார்ப்பில் ஏமாந்து போன நிறுவனங்கள்?

ஒரு புறம் கடந்த நிதியாண்டு முதலே நஷ்டத்தை கண்டு வந்த, இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு பட்ஜெட் 2019ல் ஏதேனும் ஜி.எஸ்.டி மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி ஏதேனும் இல்லாததையடுத்து மாருதி சுசூகி உள்ளிட்ட நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டிலும் சிக்கலிலேயே உள்ளன. இதனால் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maruti Suzuki Passenger vehicle Production Down By 15.60% in last june

Maruti Suzuki Passenger vehicle Production Down By 15.60% in last june
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X