Tata hexaவுக்கு மவுசு தான்.. டாடா மோட்டார் நிறுவனத்திற்கு Bangladesh Army ஆர்டர்.. சூப்பர்லா!

டெல்லி : ஒரு புறம் ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள படு வீழ்ச்சியான இந்த நிலையில், டாடா குழுமத்திற்கு இது நல்ல காலம் போல? எப்படின்னு கேட்கிறீங்களா? டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் "டாடா ஹெக்ஸா" காருக்கு அப்படியொரு மவுசுதான்.

அட ஆமாங்க.. பங்களாதேஷ் அரசு, இந்தியாவின் முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம், அந்த நிறுவனத்தின் "Tata hexa" என்ற ரக கார்களை இராணுவ பயன் பாட்டிற்காக ஆர்டர் செய்துள்ளதாம் பங்களாதேஷ் ராணுவம்.

Tata hexaவுக்கு மவுசு தான்.. டாடா மோட்டார் நிறுவனத்திற்கு Bangladesh Army ஆர்டர்.. சூப்பர்லா!

அதுவும் ஒன்னு இரண்டு இல்லங்க.. 200 வாகனங்களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளதாம்.

இது குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நான்கு சக்கர வாகனம், நான்கு சக்கர டிரைவில் வென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

டாடா மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக தலைமை அதிகாரி இது குறித்து கூறுகையில், பங்களாதேஷ் எங்களுக்கு ஒரு முக்கிய சந்தை, எங்களது வளர்ந்து வரும் வெற்றியின் தெளிவான அறிகுறி யாகும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதோடு டாடா மோட்டார் நிறுவனம் தற்போது மட்டும் அல்ல. கடந்த 2012 முதலே பயணிகள் வாகனத்தை விற்று வருகிறது. அதிலும் பங்களாதேஷூக்கு அதன் நெருக்கமான பிராண்டாக Tata Indigo, Tata Tiago and Tata Nexon வாகனங்கள் உள்ளன என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளன.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், டாடா ஹெக்ஷா பிரத்தியேகமாக இராணுவத்திற்காகவே தயாரிக்கப்படுகின்றன. இது தற்போது பயணிகளுக்கு என்று டாடா ஹெக்ஷா தயாரிக்கப்படுவதில்லை என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு புறம் வாகனங்கள் விற்பனை பெரும் வீழ்ச்சியை கண்டாலும், மறுபுறம் இது போன்றா ஆர்டர்கள் நிறுவனங்களுக்கு ஊக்கத்தினை அளிக்கிறது என்றும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் இந்த நிறுவன பங்கின் விலை கிட்டதட்ட 1 சதவிகிதம் ஏற்றம் கண்டு 156 ரூபாயாக உள்ளது. எப்படியோ india நிறுவனங்களுக்கு நல்லது நடந்தால் சரிதானே

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+