பாகிஸ்தான் பொருட்களுக்கு 200 சதவிகித இறக்குமதி வரி - செத்தாண்டா சேகரு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து விதமான பொருட்களுக்கும் 200 சதவிகித இறக்குமதி வரி விதிக்கும் மத்திய அரசின் தீர்மானத்திற்கு லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்ததை அடுத்து தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது.

 

இந்தியாவின் இறக்குமதி வரிவிதிப்பின் காரணமாக பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பலவும் இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யமுடியாமல் பாகிஸ்தானில் பொருட்களின் தேக்கம் ஏற்பட்டு நிதி நிலைமையும் மோசமானது.

பாகிஸ்தான் பொருட்களுக்கு 200 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை கடுமையாக உயரும் என்பதால்,, அப்பொருட்களை வாங்குவதற்கு யாருமே முன்வரமாட்டார்கள் என்பதால், இனிமேல் பாகிஸ்தான் பொருட்களுக்கு இந்தியாவில் சந்தை வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்பது நிச்சயம்.

அனைவருக்கும் அழைப்பு

அனைவருக்கும் அழைப்பு

கடந்த 2014ஆம் ஆண்டில் முதன் முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பிரதமர் மோடி நம் அண்டை நாடுகளுடன் சுமூக உறவை வளர்த்துக்கொள்ளும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தார். இதன்காரணமாகவே தனது பதவி ஏற்பு விழாவுக்கு பாகிஸ்தான் உள்பட அண்டை நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

விருந்தோம்பல்

விருந்தோம்பல்

இதனையடுத்து அண்டை நாடுகளுடனான அரசியல் மற்றும் வர்த்தக உறவையும் மேலும் பலப்படுத்தும் முயற்சியில் மோடி தீவிரமாக இறங்கினார். குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தகப் போக்குவரத்தை அதிகரிக்க ரொம்பவும் மெனக்கெட்டார். சீன அதிபரை இந்தியாவுக்கு அழைத்து விருந்து கொடுத்து உபசரித்தார்.

பாகிஸ்தானுக்கு சர்ப்ரைஸ் விசிட்
 

பாகிஸ்தானுக்கு சர்ப்ரைஸ் விசிட்

அதே போல், கடந்த 2015ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் சென்றுவிட்டு நாடு திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தானுக்கு விசிட் அடித்து அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டுவிட்டு திரும்பினார். கடந்த 2004ஆம் ஆண்டுக்கு பின்பு இந்தியப் பிரதமர் பாகிஸ்தானுக்கு செல்வது அரசியல் திருப்பமாக பார்க்கப்பட்டது.

அ(ச)ண்டை நாடு

அ(ச)ண்டை நாடு

பாகிஸ்தானை இந்தியா அண்டை நாடாக பார்க்க விருப்பட்டாலும், பாகிஸ்தானோ அதெல்லாம் இல்லை நாங்கள் எப்பவுமோ சண்டை நாடாகவே இருக்கப் போகிறோம் என்றே நினைத்து வருகிறது. மோடி பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டு வந்த பின்பு, இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் மற்றும் வர்த்தக உறவுகள் வலுப்படும் என்றுதான் அனைவருமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீற இந்திய எல்லைக்குள் அதிக அளவில் ஊடுறுவல் செய்து தீவிரவாத தாக்குதலை மேலும் அதிகரித்தது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது.

தீவிரவாத தாக்குதல்

தீவிரவாத தாக்குதல்

பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலின் உச்சகட்டமாக, கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் சென்ற ராணுவ வாகனத்தின் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 41 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர்.

தீவிரவாத முகாம்கள் அழிப்பு

தீவிரவாத முகாம்கள் அழிப்பு

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதலடியாக இந்திய ராணுவத்தின் விமானப்படை பிரிவு பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி சுமார் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கூண்டோடு அழித்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட விமானப்படையை ஒரு விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தி, அபிநந்தன் என்ற விங் கமாண்டரை சிறை பிடித்தது. பின்பு அமெரிக்கா உள்பட உலக நாடுகளின் வற்புறுத்தலுக்கு பயந்து அபிநந்தனை விடுவித்தது.

கதவுகள் மூடப்பட்டன

கதவுகள் மூடப்பட்டன

இதனை அடுத்து பாகிஸ்தானுக்கு அதுவரையில் அளித்து வந்த வர்த்தகத்துக்கு மிக உகந்த நாடு என்ற கவுரவத்தையும் மத்திய அரசு விலக்கிக் கொண்டது. அதோடு பாகிஸ்தான் சர்வதேச நாடுகளின் கடும் கண்டனத்திற்கும் ஆளானது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்து வந்த நிதி உதவியையும் உடனடியாக நிறுத்திக்கொண்டது. ஆனால் சீனா மட்டும் எந்தவிதமான எதிர்வினையும் காட்டாமல் கமுக்கமாகவே இருந்து வந்தது.

200 சதவிகித இறக்குமதி வரி

200 சதவிகித இறக்குமதி வரி

அடுத்த அதிரடியாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு 200 சதவிகித வரி விதிக்கப்படும் என்று மோடி உத்தரவிட்டார். பாகிஸ்தானில் இருந்து முக்கியமாக பழங்கள், டைசோடியம் கார்பனேட், பெட்ரோலியப்பொருட்கள், போர்ட்லேண்ட் யூரியா, அலுமினியம், ஜிப்ஸம், சிமெண்ட், விலங்குகளின் தோல் பொருட்கள், குறிப்பிட்ட ரசாயனப் பொருட்கள், கச்சா பருத்தி மற்றும் பருத்தி ஆடைகள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் உலர்ந்த பழங்கள் போன்றவை இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டுமே இரு நாடுகளுக்கு இடையில் சுமார் 3300 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றன.

பொருட்கள் தேக்கம்

பொருட்கள் தேக்கம்

இந்தியாவின் 200 சதவிகித வரிவிதிப்பின் காரணமாக பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பலவும் இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யமுடியாமல் பாகிஸ்தானில் பொருட்களின் தேக்கம் ஏற்பட்டு நிதி நிலைமையும் மோசமானது. அதோடு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் பலவும் விற்பனையாகமல் தேக்கமடைந்து நிலைமை மிக மோசமடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

200 % Import duty against Pakistan Goods Resolution Bill pass in Loksabha

The Lok Sabha and Rajya Sabha members approved to the central government's decision to impose a 200 percent import duty on all goods imported from neighboring Pakistan.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X