இதென்னடா “BSNL”க்கு வந்த சோதனை.. கரண்ட் பில் கட்டாததால் டவர்களுக்கு கரண்ட் இல்ல..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : "BSNL"க்கு இது போதாதா காலமே. முன்னர் சம்பளம் கொடுக்க காசில்லை என்று கூறி வந்த நிலையில், தற்போது மின்சார பில்கள் கட்டாததால் கிட்டதட்ட 1000க்கும் மேற்பட்ட மின் கோபுரங்கள் பயன்பாட்டில் இல்லையாம்.

அதோடு சுமார் 500 அலுவலகங்களும் செயல்பாட்டில் இல்லையாம், இதென்னடா "BSNL"க்கு வந்த சோதனை என்கிறீர்களா? உண்மைதான்.

இதென்னடா “BSNL”க்கு வந்த சோதனை.. கரண்ட் பில் கட்டாததால் டவர்களுக்கு கரண்ட் இல்ல..

இது குறித்து இன்று பாராளுமன்றத்தில் கூறப்பட்டதில், மின்சார பில்கள் செலுத்ததால் 1000க்கும் மேற்பட்ட மொபைல் கோபுரங்கள் செயல்பட வில்லை என்றும், 500க்கும் மேற்பட்ட தொலைபேசி நிலையங்கள் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ) செயல்படவிலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

அட ஆமாங்க.. அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய இரண்டு அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு விரிவான மறுமலர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கள் பிரசாத் மக்களைவையில் இன்று எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளாராம்.

ஏற்கனவே இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றும், மேலும் இதற்குண்டான மறுமலர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளாராம் ரவிபிரசாத்.

அதோடு தற்போது 1083 மின் கோபுரங்கள் மின்சார பில்கள் செலுத்தப்படாததால், செயல்படாத மின் கோபுரங்களாக உள்ளன என்றும், இதே தொலைபேசி நிலையங்களுக்கு செலுத்தப்படாத பில்களால் 524 நிலையங்கள் செயல்பட வில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு 258 மொபைல் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள நில உரிமையாளர்களுக்கு நிலுவைத் தொகை செலுத்தாததால் செயல்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கட்டிட உரிமையாளர்களும் சரியான பணத்தை கட்ட வேண்டும் என்றும் கூறி வருகிறார்களாம்.

பி.எஸ்.என்.எல்லின் மொத்த சந்தைப் சந்தா தாரர்களின் எண்ணிக்கை மார்ச் 2017 - 2019 வரை ஓரளவு உயர்ந்தாலும், இந்த சமயத்தில் எம்.டி.என்.எல்லின் சந்தா தாரர்களின் எண்ணிக்கை மிக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிலும் கடந்த 2018 -2019ம் ஆண்டில் எம்.டி.என்.எல்லின் சந்தா தாரர்களின் எண்ணிக்கை மிக குறைந்துள்ளது. இதே பி.எஸ்.என்.எல் சந்தா தாரர்களின் எண்ணிக்கை 53.64 லட்சம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயர்ந்தாலும், 28.27 லட்சம் சந்தாதாரர்கள் இதிலிருந்து வெளியேறினர்.

இதே நேரத்தில் எம்.டி.என்.எல்லின் சந்தா தாரர்களின் எண்ணிக்கை 1.35 லட்சத்திலிருந்து குறைந்து வெறும் 10,195 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் கடந்த 2009 - 2010லியே இழப்பை சந்திக்க தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Over 1,000 mobile towers of BSNL not functional over non-payment of bills

Over 1,000 mobile towers of BSNL not functional over non-payment of bills
Story first published: Wednesday, July 10, 2019, 18:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X