மும்பை : தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனமானது, தனது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.8,131 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது முந்தைய காலாண்டான மார்ச் காலாண்டில் 8,126 கோடி ரூபாயாக இதன் நிகர லாபாம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின்,தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டிலேயே ஒரு நிலையான மற்றும் வலுவான தொடக்கத்தையும் நாங்கள் பெற்றுள்ளோம்.
அதோடு டி.சி.எஸ் நிறுவனமானது நடப்பு நிதியாண்டின் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.38,172 கோடி வருவாயினை ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.34,261 கோடியாக இருந்தது. இது கிட்டதட்ட11.4 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் நிறுவனத்தின் மொத்த வருவாயில் டிஜிட்டல் பிரிவிலான வருவாயின் பங்களிப்பு மட்டும் 32.2 சதவிகிதமாகும். இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டை காட்டிலும், இப்பிரிவிலான வருவாயானது, நடப்பு நிதியாண்டில் 42.1 சதவிகித அளவுக்கு வளர்ச்சியினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. .
மேலும் நிகர லாபமானது ரூ.7,340 கோடியிலிருந்து, கிட்டதட்ட 11 சதவிகிதம் அதிகரித்து, ரூ.8,131 கோடி ரூபாபாயை எட்டியுள்ளது கவனிக்கதக்கது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், நிறுவனத்தின் முதல் காலாண்டில் 12,356 பணியாளர்கள் புதிதாக இணைந்துள்ளனராம். இதனையடுத்து ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையானது ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 4,36,641 ஆக உயர்ந்துள்ளதாம்.
இது மட்டும் அல்ல கடந்த ஜூன் மாத காலாண்டில், பங்கு ஒன்றுக்கு ரூ.5 டிவிடெண்ட் வழங்க இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவானது பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 12,356 ஊழியர்களை பணிக்கு சேர்த்துள்ளதாகவும், இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த காலாண்டில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு கிட்டதட்ட 30,000 புதிய பட்டதாரிகளை இணைத்துள்ளதாகவும், இவர்களில் 40 சதவிகிதத்திற்கும் மேல் வெளி நாடுகளில் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 4,36,641 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பெண்களின் விகிதம் 36.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications