கிரீன் கார்டு உச்ச வரம்பு நீக்கம்- அமெரிக்க பார்லிமெண்டில் ஓட்டெடுப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள், கல்வியாளர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்காக வழங்கப்படும் கிரீன் கார்டு வழங்குவதற்கான 7 சதவிகித வரம்பு நீக்கப்படுவதற்கான ஓட்டெடுப்பு நடக்கவிருக்கிறது.

 

ஆண்டு தோறும் உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான நபர்கள் கிரீன் கார்டு விசாவுக்கு விண்ணப்பித்தாலும், அவர்கள் அனைவருக்குமே உடனடியாக கிரீன் கார்டு வழங்கப்படுவது கிடையாது. ஆனால் இந்த விதிகள் அனைவருக்கும் பொருந்தாது என்பது தான் கவனிக்கத்தக்க அம்சமாகும்.

அமெரிக்க பிரதிநிதிகளின் சபையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 435 பேர்களாககும். இவர்களில் 290 பேர் ஓட்டளித்தால் மசோதா வெற்றிபெற்று சட்டமாகும். இந்த மசோதா சட்டமாகும்போது இந்தியர்களுக்கு தற்போது இருக்கும் எச்-1பி விசா பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Dullopur People Bank: 1% வட்டிக்கு விவசாய கடன் தரும் வங்கி! கந்து வட்டிக்காரர்களை விரட்டிய கிராமம்!

சட்டபூர்வ குடியேற்றம்

சட்டபூர்வ குடியேற்றம்

அமெரிக்காவில் குடியேறுவதற்கான கிரீன் கார்டு என்பது, அதாவது ஆயுட்காலம் முழுவதும் நிரந்தரமாகவே சட்டபூர்வமாக அங்கே குடியேறுவதற்காக வழங்கப்படும் அத்தாட்சியாகும். ஆனால் அமெரிக்க குடியுறிமை என்பது பலதரப்பட்ட அம்சங்களைப் பொறுத்து அமையும். பெரும்பாலானவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் வாயிலாகவும் கிரீன் கார்டு பெற்று வருகின்றனர்.

எந்த வகையில் உறவு

எந்த வகையில் உறவு

அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பது இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானவர்களின் கனவாகும். கிரீன் கார்டு பெற விரும்புபவர்களின் முக்கிய தகுதியானது, அவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களின் கணவன் அல்லது மனைவி, பெற்றோர் போன்ற உறவினர்களோகவோ அல்லது அமெரிக்க குடியுறிமை சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்ட வேறு பிரிவின் கீழ் வரும் அமெரிக்க குடிமகன்களின் குடும்ப அங்கத்தினர்களாகவோ இருக்க வேண்டியது அவசியமாகும்.

தொழில் முனைவோர்
 

தொழில் முனைவோர்

மற்றொரு வகையிலும் கிரீன் கார்டு பெறுவதற்கு உரிமையுண்டு. அதாவது, அமெரிக்காவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதன் மூலமும் நிரந்தரக் குடியுறிமையைப் பெறமுடியும். அமெரிக்காவில் தகுதியுள்ள 10 அமெரிக்கர்களுக்கு முழுநேர நிரந்தர வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில், ஏதேனும் நிறுவனத்தில் முதலீடு செய்பவராகவோ அல்லது நிறுவனத்தை நடத்துபவராகவோ இருக்கவேண்டியது அவசியமாகும்.

10 லட்சம் டாலர் வருமானம்

10 லட்சம் டாலர் வருமானம்

மேலும், அவர்கள் முதலீடு செய்துள்ள தொழில் நிறுவனமோ அல்லது நிறுவனங்களோ ஆண்டுக்கு குறைந்தபட்சமாக 5 லட்சம் முதல் 10 லட்சம் டாலர் வரையில் வருமானம் ஈட்டும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனமாக இருக்கவேண்டும். மேற்குறிப்பிட்ட தகுதிகள் இருக்கும் பட்சத்தில் கிரீன் கார்டு உடனடியாக கிடைத்துவிடும்.

இபி-5 விசா

இபி-5 விசா

ஆண்டு தோறும் உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான நபர்கள் கிரீன் கார்டு விசாவுக்கு விண்ணப்பித்தாலும், அவர்கள் அனைவருக்குமே உடனடியாக கிரீன் கார்டு வழங்கப்படுவது கிடையாது. ஆனால் இந்த விதிகள் அனைவருக்கும் பொருந்தாது என்பது தான் கவனிக்கத்தக்க அம்சமாகும். பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பதற்கு ஏற்ப கடந்த 18 மாதங்களில் 174 இந்திய பணக்காரர்களுக்கு இ,பி-5 விசா (EB-5 Visa) உடனடியாக வழங்கப்படுகிறது.

கிரீன் கார்டு வேதனை

கிரீன் கார்டு வேதனை

அதே சமயத்தில், தகுதியுள்ள நபர்கள் மற்றும் எச்-1பி விசா பெற்றவர்கள், அமெரிக்காவில் நிரந்தரமாக குடியுரிமைக்கான எச்ஆர்-1044 (HR-1044) விசா என்றழைக்கப்படும் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்தாலும், அவ்வளவு எளிதில் கிரீன் கார்டு கிடைத்துவிடுவதில்லை. எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் தொடர்ச்சியாக கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து வந்தாலும் அவரிகளில் சுமார் 7 சதவிகிதம் பேர்களுக்கு மட்டுமே கிரீன் கார்டு கிடைக்கிறது என்பது வேதனை.

உச்ச வரம்பை நீக்கவேண்டும்

உச்ச வரம்பை நீக்கவேண்டும்

இந்த வேதனை 70 ஆண்டுகாலாமாக தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே 7 சதவிகித உச்சவரம்பை நீக்கவேண்டும் என்று அமெரிக்க பார்லிமெண்டில் எம்பிக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்த உச்ச வரம்பை நீக்கிவிட்டால் அதிக அளவில் கிரீன் கார்டு பெற்ற தொழில் முனைவோர் அதிக அளவில் அமெரிக்காவில் முதலீடு செய்ய முடியும். அதோடு அமெரிக்க இளைஞர்களுக்கு அதிகமான பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதோடு அமெரிக்காவின் வருவாயும் அதிகரிக்கும் என்பது அமெரிக்க எம்பிக்களின் எண்ணமாகும்.

வாக்கெடுப்புக்கு தயார்

வாக்கெடுப்புக்கு தயார்

கிரீன் கார்டு வழங்குவதற்கான 7 சதவிகித உச்ச வரம்பை நீக்க வகை செய்யும் மசோதா அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகளின் சபையில் வாக்கெடுப்புக்கு வருகிறது. வாக்கெடுப்பில் வெற்றிபெற்று மசோதா நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா சட்டமாகும்போது இந்தியர்களுக்கு தற்போது ஏற்பட்டுவரும் எச்ஆர்-1044 விசா எனப்படும் கிரீன் கார்டு சிக்கல்களுக்கு வழிபிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மசோதா வெற்றிபெறும்

மசோதா வெற்றிபெறும்

அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகளின் சபையில் மொத்த எம்பிக்களின் எண்ணிக்கையானது 435 பேர்களாகும். இதில் 290 எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தால் மசோதா வெற்றிபெறும். இந்த மசோதாவுக்கு ட்ரம்பின் ஆளும் குடியரசுக் கட்சி மற்றும் எதிர் கட்சியான ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சிகளின் 310 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. ஆகவே இந்த மசோதா எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி உடனடியாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US Congress ready for vote on Green card bill

The bill, however, has to be passed by the Senate, wherein the Republicans enjoy a majority, before it can be signed into law by the US president Donald Trump.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X