2000 ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.3.53 காசு செலவாகுது

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்காக ஆகும் செலவு கடந்த 2017-18ஆம் ஆண்டைக் காட்டிலும் 2018-19ஆம் ஆண்டில் 65 காசுகள் குறைந்து 3 ரூபாய் 53 காசுகள் மட்டுமே செலவானது என்றும் ராஜ்யசபாவில் பதிலளிக்கப்பட்டது.

 

கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் 2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பதற்காக சுமார் 4 ரூபாய் 18 காசுகள் ஆனது. பின்னர் படிப்படியாக தயாரிப்பு செலவுகள் குறைந்துவிட்டாதால் 201.-19ஆம் ஆண்டில் அச்சடிக்கும் செலவு கணிசமாக குறைந்துவிட்டதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

 
2000 ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.3.53 காசு செலவாகுது

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவில் பிரதமர் மோடி உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். கூடவே அதற்கு பதிலாக முற்றிலும் புதிய வடிவிலான 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பட்டு பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படும் என்றும் அறிவித்தார்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை முற்றிலும் ஒழித்துவிட்டு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்கு கூடுதல் செலவானதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்கு கடந்த 2016-17ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து 965 கோடி ரூபாய் மட்டுமே செலவானதாக கடந்த 2017ஆம் ஆண்டில் மத்திய அரசு புள்ளி விவரத்தை வெளியிட்டது

அதே போல் கடந்த 2017-18ஆம் ஆண்டில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களோடு புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களும் அச்சடிக்கப்பட்டதால் இதற்கான செலவு இரண்டு மடங்காக அதிகரித்தது. புதிய 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க ரூ,2.39 காசும், புதிய 2000 ரூபாய் நோட்டை அச்சடிக்க ரூ.4.18 காசும் செலவானதாக மத்திய அரசு புள்ளிவிவரத்தை வெளியிட்டது.

தற்போது 2018-19ஆம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க செலவான புள்ளிவிவரத்தை மத்திய அரசு ராஜ்யசபாவில் வெளியிட்டுள்ளது. அதில் 2000 நோட்டை அச்சடிக்க ரூ.3.53 காசுகள் செலவானதாகவும், 500 ரூபாய் நோட்டை அச்சடிப்பதற்கு ரூ.2.13 காசுகள் செலவானதாவும் தெரிவித்துள்ளது.

என்ன சொல்றீங்க.. ஒரே ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் பணம் எடுத்தார்களா.. அதுவும் 448 நிறுவனங்களா? என்ன சொல்றீங்க.. ஒரே ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் பணம் எடுத்தார்களா.. அதுவும் 448 நிறுவனங்களா?

அதே போல் கடந்த 2017ஆம் ஆண்டு வாக்கில் கொண்டு வரப்பட்ட 200 ரூபாய் நோட்டை அச்சடிக்க ரூ.2.24 காசுகள் செலவானதாகவும், கடந்த 2018-19ஆம் ஆண்டில் ரூ.2.15 காசுகள் மட்டுமே செலவானதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணியை மத்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான பாரதீய ரிசர்வ் வங்கி நோட் முத்ரான் பிரைவேட் லிமிடெட் (Bharatiya Reserve Bank Note Mudran Pvt Ltd) நிறுவனமும் செக்யூரிட்டீஸ் பிரிண்ட்டிங் அண் மின்ட்டிங் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனமும் ஏற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2000 Rupee currency note printing cost falls by 65 paise in 2018-19

As per the data provided by the government to the Rajya Sabha on Tuesday, the printing cost of Rs.2000 note from the Bharatiya Reserve Bank Note Mudran Pvt Ltd was Rs. 3.53 a piece in 2018-19 and, it declined 65 paise from Rs.4.18 a piece in 2017-18.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X