மும்பை : இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருந்து வந்த ரிலையன்ஸ் நிறுவனம் பிரிந்த பின்னர், அண்ணன் முகேஷ் அம்பானியோ மேன் மேலும் பறந்து கொண்டிருக்கையில், மறுபுறம் அவரது சகோதரர் அனில் அம்பானியோ அதள பாதளாத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
அதிலும் சர்வதேச கோடிஸ்வரர்கள் பட்டியியலில் இருந்து லட்சாதிபதியாக இறங்கியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் தற்போது மிகுந்த கடன் பிரச்சனையில் தவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே பல சொத்துகளை விற்று கடனை அடைத்து வந்த அனில் அம்பானி மேலும் தனது சொத்துக்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளாராம்.
ஒரு புறம் கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் அனில் அம்பானி, மறுபுறம் சொத்தை விற்றாவது கடனை கட்டி விட வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
நிதி திரட்ட திட்டம்?
அந்த வகையில் தனக்குண்டான சொத்துக்களில், ரோடு முதல் ரேடியோ வரை விற்று ரூ.217 பில்லியனை (3.2 பில்லியன் டாலரை) திரட்ட திட்டமிட்டுள்ளாராம். அதில் ரிலையன்ஸ் Reliance Infrastructure Ltd நிறுவனம் அதன் விற்பனை மூலம் 90 பில்லியன் ரூபாயை கோருகிறது. இதே ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் அதன் ரேடியோ அலகினை விற்பதன் மூலம் 12 பில்லியன் ரூபாயினை திரட்டவும் திட்டமிட்டுள்ளது. அதோடு வணிகப் பிரிவில் அதன் பங்குகளை பணமாக்குவதன் மூலம் 115 பில்லியன் ரூபாயை திரட்டவும் திட்டமிட்டுள்ளது.
கடனுக்கு எதிரான பெரிய யுத்தம்!
ஒரு புறம் கடன் பிரச்சனையால் மிகுந்த அவதிக்குள்ளாவாதோடு, கடனுக்கு எதிராக பெரிய யுத்தத்தையே நடத்தி வருகிறார். அதிலும் அனில் அம்பானி கடந்த ஜூன் 11ம் தேதி அன்று தனது ரிலையன்ஸ் குழுமம், கடந்த 14 மாதங்களில் பல சொத்துகள் விற்பனை மூலம் 350 பில்லியன் ரூபாய் கடனை அடைத்ததாக கூறுயிருந்தார்.
பெரிய அளவில் கடனை கொண்டுள்ளது?
எனினும் சொத்துக்களை விற்று கடனை கட்டினாலும், இன்னும் கடன் பெரிய குவியலாக இருக்கிறதாம், ஆமாங்க இந்த நிறுவனத்தின் நான்கு நிறுவனங்களின் கடன், இன்னும் சுமார் 939 பில்லியன் ரூபாய் கடனை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் அனில் அம்பானியில் மிகப்பெரிய சாம்ராஜியமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமே திவால் நிலைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சொத்து விற்பனை மூலம் மட்டுமே இந்த கடன் அடைப்பு சாத்தியாமாகும் என்ற நிலையில், இதன் மூலம் மிச்சமிருக்கும் நிறுவனங்களின், நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்றும் கூறப்படுகிறது.
நிதி மதிப்பீட்டை குறைக்கும் கடன்?
ஏற்கனவே கடன் பிரச்சனையால் தவித்து வரும் அனில் அம்பானிக்கு மற்றொரு பெரிய பிரச்சனையும் காத்திருக்கிறது. சொத்துகள் விற்பனை விரைவாக செய்யப்பட்டு விரைவில் கடன்கள் அடைக்கப்பட வேண்டும். இல்லையெனில் கேர் மதிப்பீட்டு நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்திலிலேயே சுட்டிக் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் சொத்து விற்பனை தாமதமாகி வருவதால் இந்த நிறுவனத்தின் நிதி மதிப்பீடு குறைந்து வருகிறது என்றும். இனியும் இது தாமதமாகினால் அது இந்த நிறுவனத்தில் நிதி மதிப்பீட்டை மேலும் குறைக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடன் கட்டுதல் மதிப்பீடுகளை அதிகரிக்க உதவும்?
ஒரு புறம் இந்த சொத்துகளை விற்று கடனை அடைப்பதன் மூலம், இந்த நிறுவனத்தின் கடன் அளவும் குறையும், மறுபுறம் கடன் மதிப்பீடும் (Crdit score) அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் அனைத்து கடன் கடமைகளையும் பூர்த்தி செய்ய உறுதி பூண்டுள்ளது என்றும் ஒரு மாநாட்டில் அனில் கூறியிருந்தார், இந்த நிலையில் மேலும் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம், இன்னும் கடன் பிரச்சனையை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications