இந்தியா மட்டும் தோத்து போகல.. இந்தியாவைப் நம்பி பணம் போட்டவங்களுக்கும் கோவிந்தா..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியா, உலகப் கோப்பை கிரிகெட் விளையாட்டில் தோற்றுப்போனாலும் மிகச் சிறப்பாக விளையாடியதாகவே பல தரப்பிலும் கூறப்படுகிறது.

 

ஆமாங்க.. புதன் கிழமையன்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இறுதி வரை கடுமையாக போராடியும் தோல்வி அடைந்ததால், ஒரு புறம் இந்திய ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அது என்ன கேட்கிறீங்களா? டெல்லியில் சட்டா மார்கெட் என்ற சட்ட விரோத சூதாட்ட சந்தையில், கடந்த புதன் கிழமையன்று நடந்த போட்டியின்போது, பலர் இந்தியாவுக்கு ஆதரவாக பந்தயம் கட்டியதில் பல கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ரூ.1 பில்லியனுக்கும் மேல் இழப்பு?

ரூ.1 பில்லியனுக்கும் மேல் இழப்பு?

கடந்த புதன் கிழமை நடந்த உலகப் கோப்பை அரையிறுதி போட்டியில், இந்தியா கட்டாயம் வெற்றி பெறும் என்று கருதப்பட்டு வந்த நிலையில், நியூசிலாந்த் அணியினரால் இந்தியா எதிர்பாராத தோல்வியை கண்டது. ஆமாங்க.. மிகக் குறைந்த இலக்கில் வெற்றியை பறிகொடுத்தது இந்தியா. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் வருத்தத்திற்குள்ளானார்கள். அதே நேரம் டெல்லியில் உள்ள சட்டா மார்கெட்டில் இந்தியா தான் ஜெயிக்கும் என கோடி கணக்கில் பெட் கட்டியவர்கள் அனைவரும், தங்களது கோடி கணக்கான பணத்தையும் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 ஆன்லைன்களிலும் பெட்?

ஆன்லைன்களிலும் பெட்?

ஆட்டத்தின் சூழ்நிலைகளை பார்த்து, யார் வெற்றிப் பெறுவார்கள், தோற்பார்கள் என கூறி, குறிப்பிட்ட பணத்தை அந்த அணியின் பெயரில் பந்தயத்தில் வைப்பர். நியூசிலாந்துடனான 2 நாள் ஆட்டம் மிகுந்த பரபரப்பானதாக இருந்தது. நியூசிலாந்து அணி நேற்று முன்தினம் ஆடிய ஆட்டத்தில் இருந்தே சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி பந்தயம் சென்றது. இந்த நிலையில் புதன் கிழமையன்று, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோலி, கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா ஆகியோர் வெளியேறினர்.

இந்தியாவுக்காகவும் பெட்?
 

இந்தியாவுக்காகவும் பெட்?

சிலர் நியூசிலாந்து அணி தான் வெற்றிப் பெறும் என பந்தயம் கட்டினர். ஆனால் டோனி -ஜடேஜா களமிறங்கியவுடன், இன்றைய வெற்றி இந்திய அணிக்கே எனப் பலரும் நம்பினர். இதனால் இந்தியா மீது பந்தயமும் கட்டினர். எதிர்ப்பாராத விதமாக டோனியும் அவுட் ஆகவே, எஞ்சிய மொத்த நம்பிக்கையும் சிதைந்தது. இதனால் இந்திய அணியை நம்பி பணத்தை கட்டிய பலரும் ஏமாற்றமடைந்தனர். இந்த தோல்வியால் பந்தயம் கட்டியவர்களுக்கு 100 கோடிகளுக்கும் மேல் நஷ்டமானதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

239 ரன்கள் இலக்கு!

239 ரன்கள் இலக்கு!

உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில், முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா ஒரு ரன்னிலேயே அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கோலியும் ஒரு ரன்னில் அவுட் ஆகவே, இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் இந்தியா தோல்வியை கண்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: cricket world cup
English summary

Cricket world cup : Those who placed their bets on NZ also had a feel of winning a lottery.

Cricket world cup : Those who placed their bets on New zealand also had a feel of winning a lottery.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X