ஒளரங்காபாத்: Richard Tongi இன்று கென்ய நாட்டின் ஒரு மக்களவை உறுப்பினர். அதோடு கென்ய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகார கமிட்டியின் துணைத் தலைவரும் கூட.
சில தினங்களுக்கு முன் தான் இந்திய பிரதமரைச் சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான விவகாரங்களை எல்லாம் பேசி இருக்கிறர். கூட்டம் எல்லாம் முடிந்த உடன் தன் குழுவினரிடம் ஒளரங்காபாத் செல்ல வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்.
ஏன்..? என்ன என Richard Tongi-ன் மனைவி விசாரித்திருக்கிறார். அப்போது தான் தனக்கு உதவிய ஒரு இந்தியருக்கு 200 ரூபாய் கடன் பாக்கி வைத்திருப்பதைச் சொல்கிறார்.
காசிநாத்
நம் Richard Tongi-ன் 1985 - 1989 வரையான கல்லூரி காலம், இந்தியாவில் தான் கழிந்திருக்கிறது. ஒளரங்காபாத்தில் உள்ள மெளலானா ஆசாத் கல்லூரியில் தான் நிர்வாகவியலில் பட்டம் பெற்று இருக்கிறார். Richard Tongi-ன் கல்லூரி காலங்களில் காசிநாத் அவ்வப் போது பல உதவிகளைச் செய்திருக்கிறார். சொல்லப் போனால், காசிநாத் தான் Richard Tongi தங்குவதற்கான இடத்துக்கு கூட உதவி செய்தாராம். Richard Tongi உட்பட வெளிநாட்டவர்கள் அதிகம் பொருட்களை வாங்கும் மளிகைக் கடைகளில் காசிநாத் கடையும் ஒன்றாம்.
அந்த ரூ.200 பாக்கி
Richard Tongi-க்கு பல சமயங்களில் பல உதவிகளைச் செய்திருக்கிறார் காசிநாத். அப்படி உதவும் போது சுமார் 200 ரூபாய் காசிநாத்துக்கு கடன் பாக்கி வைத்து விட்டு தன் கென்ய நாட்டுக்கு பறந்துவிட்டார். ஆனால் இந்த பணத்தை எப்படியாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். அதன் பிறகு 30 ஆண்டுகளில் ஒரு முறை கூட காசிநாத்தும் Richard Tongi-யும் சந்தித்துக் கொள்ளவில்லை.
2 நாள் அலைச்சல்
இந்திய பிரதமருடனான சந்திப்பு முடிந்த பின் தன் மனைவியோடு ஒளரங்காபாத்துக்கு வந்து, இரண்டு நாட்கள் காசிநாத்தைத் தேடி அலைந்திருக்கிறார் Richard Tongi. ஒருவழியாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை 08, 2019) தனக்கு தேவையான நேரங்களில் உதவிய காசிநாத்தைக் கண்டு பிடித்து அவரின் பெரிய வீட்டுக்கே சென்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தன் பழைய பாக்கி 200 ரூபாயைக் கொடுத்திருக்கிறார். இருவருக்குமே கண்ணீர் வந்துவிட்டது.
கடன் வாங்கிக் கோங்க
Richard Tongi கொடுத்த 200 ரூபாய் கடனை திரும்ப வாங்க மறுத்துவிட்டார் பழைய கடைக்காரர் காசிநாத். அதே புன்னகையோடு, காசிநாத்தின் குடும்பத்துக்கு பல பரிசுகளைக் கொடுத்து தன் நன்றியைத் தெரிவித்திருக்கிறார் அந்த கென்ய மக்களவை உறுப்பினர் Richard Tongi. "Richard Tongi-ன் நேர்மை என்னைத் தொட்டுவிட்டது" என கண்ணீர் விட்டு மகிழ்ந்திருக்கிறார் காசிநாத். Richard Tongi-யோ "எனக்கு நேர்மையைச் சொல்லிக் கொடுத்ததே இந்தியர்கள் தான் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்" என மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார்.
பிரியாவிடை
காசிநாத்தின் குடும்பமே ஒன்று சேர்ந்து, இந்திய வழக்கப்படி வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை உபசரித்து, நல்ல சுவையான இந்திய உனவுகளை விருந்து போட்டு அசத்தி இருக்கிறார்கள். Richard Tongi-ன் மனைவிக்கு பட்டு சேலைகளையும், Richard Tongi-க்கு இந்திய காந்தி தொப்பிக்களையும் பரிசாகக் கொடுத்து மகிழ்ச்சியாக வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். அன்பும், மனிதமும் எல்லாவற்றையும் விடப் பெரியது என மீண்டும் உரக்கச் சொல்லி இருக்கிறத் இந்த சம்பவம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications