வழக்கம்போல ரிலையன்ஸ் ஜியோ தான் பர்ஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்.. டிராய் மதிப்பீடு!

டெல்லி : ரிலையன்ஸ் ஜியோவால் மற்ற தொலைத் தொடர் நிறுவனங்கள் பல காணமல் போனதும், சில நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதும் கவனிக்கதக்க விஷயமாகும்.

இந்த நிலையில் மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பின் படி, வழக்காக இந்த முறையும் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனமே முன்னிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது.

இதே மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஜியோவுடன் போட்டி போட முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

ஜியோ தான் முன்னிலை!

ஜியோ தான் முன்னிலை!

ஆமாங்க.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த மார்ச் 2019வுடன் முடிவடைந்த காலாண்டில், அதன் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் சுமார் 9,839 கோடி ரூபாயாக உள்ளதாம். அதோடு பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் முறையே அடுத்தடுத்த இடத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வோடபோன் & ஏர்டெல் நிறுவனங்களுக்கு நஷ்டம் தான்

வோடபோன் & ஏர்டெல் நிறுவனங்களுக்கு நஷ்டம் தான்

என்று ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் காலாடி எடுத்து வைத்ததோ அன்றிலிருந்தே மற்ற நிறுவனங்களுக்கு ஏழரை சனி தான். ஆமாங்க.. அதிலும் கடந்த மார்ச் 2019 மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக இருந்த வோடபோன், கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இதன் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் 1.25 குறைந்து 7,133.4 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே பார்தி ஏர்டெல் நிறுவனம் 8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 5,920.2 கோடி ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜியோவுக்கு கூட கொஞ்சம் டல் தான்?

ஜியோவுக்கு கூட கொஞ்சம் டல் தான்?

இது குறித்து டிராய் நிறுவனம் கூறுகையில், ஜியோ நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ஜியோ நிறுவனத்தின் சரி செயப்பட்ட மொத்த வருவாய் 9,839 கோடி ரூபாயாக இருந்தாலும், கடந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட 14.6 சதவிகிதம் வீழ்ச்சி தான். கடந்த டிசம்பர் காலாண்டில் அனுபவித்த வருவாயை ஜியோவும் கூட பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

 மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்தது?

மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்தது?

கடந்த மார்ச் காலாண்டில் தொலைத் தொடர்பு செயல் திறனை அளவிடும், "இந்தியன் டெலிகாம் சர்வீசஸ்" என்ற தலைப்பில் டிராய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, மார்ச் 2019ல் இறுதியில் நாட்டின் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1,183.5 மில்லியனாக குறைந்துள்ளது. இதுவே டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது 1.20 சதவிகிதம் குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.88 சதவிகிதம் குறைந்துள்ளது.

வயர்லெஸ் வருவாய் அதிகரிப்பு?

வயர்லெஸ் வருவாய் அதிகரிப்பு?

இந்தியாவின் ஒட்டுமொத்த டெலிடென்சிட்டி கடந்த மார்ச் 2019ல் 90.11 ஆக குறைந்துள்ளது. இது முன்னர் கடந்த டிசம்பர் 2018ல் 91.45 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் வயர்லெஸ் சேவைக்கான பயனரின் மாத சராசரி வருவாய், நடப்பு ஆண்டில் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 1.80 சதவிகிதம் அதிகரித்து 71.39 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த டிசம்பர் 2018ல் 70.13 ரூபாயாக மட்டுமே இருந்தது.

தொலைத் தொடர்பு சேவையின் மொத்த வருவாய்?

தொலைத் தொடர்பு சேவையின் மொத்த வருவாய்?

இது ஒரு புறம் இருந்தாலும், கடந்த மார்சி 2019 காலாண்டில், தொலைத்தொடர்பு சேவைத் துறையின் மொத்த வருவாய் மற்றும் சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் முறையே 58,414, கோடி மற்றும் 35,932 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+