இன்று Railway தனியார்மயம்.. நாளை ஏர் இந்தியா.. ஒரு நாள் மோடி நாட்டையும் விற்பார்.. காங்கிரஸ் அட்டாக்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பாஜக தலைமையிலான மோடி அரசு, தொடர்ந்து ரயில்வேயின் சொத்தை விற்க தீவிர முனைப்பு காட்டி வருவதாகவும், இதன் மூலம் மோடி அரசு மக்களுக்கு எதுவும் செய்யாமல், கனவுகளை மட்டும் விற்கிறது என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

 

இந்த நிலையில் லாபம் சம்பாதிக்கிற ரயில்வே தொழிற்சாலைகளை, தனியார்மயமாக்க காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போர்க்கொடி காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடந்த வியாழக்கிழமையன்று தொடங்கி வைத்து பேசினார்.

பிரதமர் மோடி நாட்டையே ஒரு நாள் விற்பார்?

பிரதமர் மோடி நாட்டையே ஒரு நாள் விற்பார்?

இது குறித்து மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், விமானத் போக்குவரத்து துறை அமைச்சர் ஏர் இந்தியாவை விற்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுவே ரயில்வே அமைச்சர், ரயில்வே துறையை தனியார் மயமாக்கவும் துடிக்கிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி ஒரு நாள் நாட்டையே விற்க துணிவார் என்றும் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

சுரேஷ் பிரபுவின் ரூ8.5லட்சம் கோடு என்ன ஆனது?

சுரேஷ் பிரபுவின் ரூ8.5லட்சம் கோடு என்ன ஆனது?

பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு, கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து அதன் இலக்குகளை அடைய முடியாமல் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அடித்த 5 வருடத்துக்குள் ரயில்வே துறைக்கு ரூ.50 லட்சம் கோடி செலவிடப்படும் என்று நிதியமைச்சர் சீதாராமனின் பட்ஜெட் சொல்கிறது. ஆனால் முன்னர் சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சராக இருந்த போது ரூ.8.5 லட்சம் கோடி செலவிடப்படும் என கூறினாரே? அந்த ரூ.8.5 லட்சம் கோடி என்ன ஆனது என்றும் சுரேஷ் பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.

ரயில்வே சொத்துக்களை விற்க விரும்புகிறீர்கள்?
 

ரயில்வே சொத்துக்களை விற்க விரும்புகிறீர்கள்?

நீங்கள் தற்போது கூடுதலாக ரூ.50 லட்சம் கோடி ரயில்வே பட்ஜெட்டில் சேர்த்து இருக்கிறீர்கள். ரயில்வே சொத்துக்களை விற்பதைதான் விரும்புகிறீர்களா? இது தான் உங்கள் நோக்கமா? இதிலிருந்து நீங்கள் இதைத் தான் விரும்புகிறீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது என்றும் விமர்சித்துள்ளார்.

படுக்கைக்கு பாயே இல்லை ஆனால் கூடாரத்தை தேடுவதா?

படுக்கைக்கு பாயே இல்லை ஆனால் கூடாரத்தை தேடுவதா?

ரயில்வே பட்ஜெட்டின் மூலம் நீங்கள் முதலீடுகள் செய்யப்போவதாக சொல்வது, படுப்பதற்கு பாய்கூட இல்லாத, தற்போதைய நிலையில் தூங்குவதற்கு கூடாரத்தை தேடுவது போல இருக்கிறது உங்களது பட்ஜெட் என்றும் கேலி செய்துள்ளார் ரஜ்சன்.

ரயில்வே செயல்பாட்டு விகிதம் அரசு மதிப்பீடை விட அதிகம்?

ரயில்வே செயல்பாட்டு விகிதம் அரசு மதிப்பீடை விட அதிகம்?

ரயில்வேயின் செயல்பாட்டு விகிதம் கடந்த 2017 - 2018ல் 98.4 சதவிகிதமாகும், இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இது அரசு மதிப்பீட்டை விட அதிகமாகும். வருவாய் மற்றும் செலவுகள் அதிகாரப்பூர்வ தகவல்களை விட குறைவாக உள்ளது. ஆனால் நீங்கள் கனவுகளை விற்பனை செய்வதை மட்டும் நிறுத்தவில்லை.

காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தியும் முன்னரே குற்ற சாட்டு?

காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தியும் முன்னரே குற்ற சாட்டு?

இந்திய ரயிலேவேயை தனியார்மயமாக்குவதை எதிர்த்து சோனியா காந்தி கடந்த ஜூலை 02, 2019ல் பாராளுமன்றத்தில் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் Indian Railways-க்கு சொந்தமான, ரெப ரேலியில் இருக்கும் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை உட்பட பல்வேறு Indian Railways-க்கு சொந்தமான உற்பத்தி நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் பேசி இருந்தார் சோனியா காந்தி, ஆனால் மத்திய ரயில்வே அமைச்சகமோ சோனியா காந்தியின் குற்றச்சாட்டை மறுத்திருந்தது. அதோடு Indian Railways-க்கு சொந்தமான ரயில் பெட்டித் தொழிற்சாலைகள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் பதில் கூறியிருந்தது நினைவு கூற தக்கது.

அப்புறம் ஏன் ஏர் இந்தியா பங்குகளை விற்க துடிக்கிறீர்கள்?

அப்புறம் ஏன் ஏர் இந்தியா பங்குகளை விற்க துடிக்கிறீர்கள்?

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, பதிலளித்த சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் பூரி, ஏர் இந்தியா மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் அதன் கடன் சுமையை தாங்க முடியாது தவிக்கிறது எனவும் கூறியுள்ளார். இதற்கு எதிராக

காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, ஏர் இந்தியா மிகச்சிறப்பாக செயல்படுகிறது எனில் பிறகு ஏன் அதன் பங்குகளை விற்க அரசு தீவிரம் காட்டி வருகிறது எனவும் கலக்கியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

congress alleges government trying to privatise Railways

congress alleges government trying to privatise Railways
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X