டெல்லி : ஒரு புறம் சில விமான நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை கண்டு வந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 148.2 சதவிகிதம் லாபம் கண்டுள்ளது.
இதுவே கடந்த வருடத்தோடு ஒப்பிடும்பொது 449.8 சதவிகிதம் அதிகரித்து 139.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவே கடந்த ஏப்ரல் - முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 148.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு கடந்த முதல் காலாண்டில் நிகர விற்பனையானது 9.8 சதவிகிதம் அதிகரித்து ரூ. 2,778.3 கோடியாக உயர்துள்ளது. இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது நிகர விற்பனையானது ஆண்டுக்கு 24.3 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாய் ஆண்டுக்கு 52.6 சதவிகிதம் அதிகரித்து, (இதுவே காலாண்டுடன் ஒப்பிடும்போது 8.8 சதவிகிதம் அதிகரிக்கலாம்) ரூ. 554.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முதல் காரணம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்திக் கொண்டதே என்றும் கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் பிரச்சனையால் தனது உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு சேவையை வழங்கி வந்த இந்த நிறுவனம், கடன் பிரச்சனையால் தவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்டத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும், செயல்பாட்டு மூலதனம் இல்லாமலும் இருந்தது. இந்த சூழ்னிலையில் எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே ,இந்த நிறுவனம் தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. இதனால் இந்த விமானத்தின் பற்பல வாய்ப்புகள், மற்ற விமான நிறுவனங்களுக்கு கிடைத்தது.
இந்த நிலையில், மிகச் மலிவான விலைக்கு விமான சேவை கொடுத்து வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு இது மிக மிகச் சாதகமான விஷயமாகவே அமைந்தது. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் லாபத்தை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆமாங்க.. விமான நிறுவனங்களுக்கு இது ஜாக்பாட் காலம் என்றே கூறலாம், இதிலும் பயணிகளை தன்பால் ஈர்க்க ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பல கவர்ச்சிகரமான பல ஆஃபர்களை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications