பெங்களூரு: இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான Infosys இந்த 2019 - 20 நிதி ஆண்டில் சுமார் 18,000 ப்ரெஷ்ஷர்களை பணிக்கு அமர்த்தப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள் Infosys நிறுவனத்தினர்கள். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 12, 2019) அன்று சொன்ன போதே, இந்த 18,000 பேரையும் கேம்பஸ் இண்டர்வியூ முறையில் தேர்ந்தெடுக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
Infosys நிறுவனத்தில் தற்போது சுமார் 2.29 லட்சம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். எல்லா ஐடி நிறுவனங்களைப் போல வேலையை விட்டுப் போவது அல்லது நிறுவனமே ஊழியர்களை வேலையை விட்டு தூக்குவது போன்ற attrition பிரச்னைகளை Infosys நிறுவனமும் சமாளித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் Infosys ஊழியர்கள் தொடர்பான பிரச்னைகள், தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதிக்கவில்லை என்பதையும் அழுத்திச் சொல்லி இருக்கிறார்கள்.

2019 - 2020 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரையான 3 மாதத்தில்) இதுவரை சுமார் 8,000 ஊழியர்களை பணிக்கு எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் 2,500 பேர் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு வரும் ஃப்ரெஷ்ஷர்கள் என்பதை Infosys நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி (Chief Operating Officer) யூ பி பிரவீன் ராவ் சொல்லி இருக்கிறார்.
கடந்த ஜூன் 2019 வரையான முதல் காலாண்டில் (மொத்தமாக வேலைக்கு புதிதாக எடுக்கப்பட்டர்கள் - வேலையில் இருந்து ராஜினாமா செய்தவர்கள்) 906 பேரை புதிதாக வேலைக்கு எடுத்திருக்கிறார்களாம். Infosys நிறுவனத்தில் ஒரு ஆண்டில், 100-ல் 23.4 பேர் வேலையை விட்டுப் போகிறார்களாம். இதை ஆங்கிலத்தில் அட்ரிஷன் ரேட் என்று சொல்வார்கள். இந்த அட்ரிஷன் ரேட் ஒரு வருட சராசரியை விட கடந்த மார்ச் 2019-ல் குறைவாக 20.4 சதவிகிதம் மட்டுமே இருந்ததாகச் சொல்கிறது Infosys ஆண்டறிக்கைகள்.
Infosys தன் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு திட்டங்களைத் தொடங்கி இருப்பதாகவும், ஊழியர்கள் வேலை வாய்ப்பு மற்றும் ஊழியர்களின் பணி அனுபவத்தை மேம்படுத்தவும் முதலீடுகள் மேற் கொண்டிருப்பதாகச் சொல்கிறார் Infosys நிறுவனத்தின் முதன்மைச் செயல்பாட்டு அதிகாரி பிரவீன் ராவ்.


Click it and Unblock the Notifications