தென்மேற்கு பருவ மழை பொய்துப்போன காரணத்தினால், காய்கறிகள், பழங்கள் மற்றும் அசைவ உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து கடந்த ஜூன் மாதத்திய சில்லறை பணவீக்க விகிதம் 3.18 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்
டெல்லி: நடப்பு பருவத்தில் தென்மேற்கு பருவ மழை பொய்துப்போன காரணத்தினால், காய்கறிகள், பழங்கள் மற்றும் அசைவ உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து கடந்த ஜூன் மாதத்திய சில்லறை பணவீக்க விகிதம் 3.18 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதத்தில் சில்லறை பணவீக்க விகிதம் 3.05 சதவிகிதமாக இருந்தது. இதனையடுத்து மொத்த பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது. இருந்தாலும் சில்லறை பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நடப்பு கரீப் பருவத்தின் தொடக்க மாதமான ஜூன் மாதத்தின் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை நாட்டின் எதிர்பார்த்த அளவில் இல்லை. இப்பொழுதுதான் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சற்று எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக விவசாய விளைபொருட்களின் விளைச்சல் வழக்கத்தை விட குறைந்துபோனது.
கூடவே, ஜூன் மாதத்தில் அதிக சுபநிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற்றதால் காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் போன்ற அசைவு உணவுப்பொருட்களின் விலையும் அதிகரித்துக் காணப்பட்டது. இதை உத்தேசித்தே பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்தும் முடிவில் ரிசர்வ் வங்கி, நடப்பு 2019ஆம் ஆண்டில் மூன்றாம் முறையாக கடந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் வரை குறைத்தது.
வங்கி வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும் ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தது போல் சில்லறை பணவீக்க விகிதம் குறைந்தபாடில்லை. கடந்த மே மாதத்தில் சில்லறை பணவீக்க விகிதம் 3.05 சதவிகிதமாக இருந்தது. ஆனால், ஜூன் மாத சில்லறைப் பணவீக்க விகிதம் 3.18 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தரவுகளை வெளியிட்டுள்து.
ஜூன் மாதத்திய சில்லறை பணவீக்க விகிதம் அதிகரித்தது குறித்து புள்ளியில் துறை விளக்குகையில், உணவுப் பொருட்களின் மதிப்பீட்டு மாதத்தின் அடிப்படையில், அதற்கு முந்தைய மே மாதத்தில் இருந்ததைக் காட்டிலும் சுமார் 1.83 சதவிகிதம் வரை உயர்ந்து 2.17 சதவிகிதிமாக அதிகரித்தது. இதன் காரணமாகவே ஜூன் மாதத்திய சில்லறை பணவீக்க விகிதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும்.
அதேபோல், ஜூன் மாதத்தில் அதிக அளவில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் என்பதால், காய்கறிகள், பழங்கள் போன்றவை சிறிய அளவிலேயே அதிகரித்து காணப்பட்டது. ஆனால் அசைவ உணவு வகைகளான முட்டை, இறைச்சி, மீன் வோன்றவற்றின் தேவையும் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டதால், விலையும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. இதுவும் ஜூன் மாத சில்லறை பணவீக்க விகிதம் சற்று கூடியுள்ளதாக புள்ளியில் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications