திருச்சி : வரி வருவாயில் மாநில அரசுகளுக்கான பங்கில் 9 சதவிகித பங்கை மத்திய அரசு குறைக்கிறது என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
வரி வருவாயில் மாநில அரசுகளுக்கான பங்கில் 9 சதவிகிதத்தை மத்திய அரசு குறைப்பதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019 - 2020-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பற்றிய கலந்தாய்வு திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு, பட்ஜெட்டை ஒப்பிட்டு அது பற்றி பேசியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருந்த போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் மறுநாளே அந்த பேச்சு அடிபட்டு போய் விட்டது.
அதிலும் கடந்த 2018 - 2019-ம் நிதியாண்டில் பொருளாதாரம் மிக மந்தமான கதியில் இருந்தது. இதை மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து பட்ஜெட்டில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், அப்படி ஏதும் இல்லாததால், பட்ஜெட் குறித்த எதிர்பார்புகள் உடைந்து போய்விட்டது.
இந்தியாவில் ஆண்டுக்கு 10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதனை இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் வேலையின்மையும் அதிகரித்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது வேலைவாய்ப்பு இல்லாமை 7.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் கடந்த 4 ஆண்டுகளில் 4 கோடியே 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
இதோடு சேமிப்பு பற்றி, இந்த பட்ஜெட்டில் எந்த ஊக்கமும் கொடுக்கப்படவில்லை. அதோடு சேமிப்பில் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. மேலும் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட அச்சத்தில் இருந்து இந்தியா இன்னும் மீளவில்லை.
இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவோம் என இலக்கு நிர்ணயித்துள்ளது கவர்ச்சிகரமாக தான் உள்ளது. நிதி கமிஷனின் அறிக்கையின் படி மத்திய அரசின் வரி வருமானத்தில் 42 சதவிகிதம் மாநில அரசுக்கு பங்களிப்பு தர வேண்டும். ஆனால் மாநில அரசுகளுக்கு 9 சதவிகிதமாக பங்கு தொகை குறையப் போகிறது. இதனை மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும், இது குறித்து குரல் எழுப்ப வேண்டும். நான் கூறுகிற கணக்கினை மாநில முதல்-அமைச்சர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதில் பிழை இருந்தால் திருத்தி கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் இல்லை. மேலும் நடுத்தர மக்கள் அவ்வப்போது பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு சுங்க வரியையும் உயர்த்தி உள்ளனர். பெட்ரோல், டீசல் மின்சாரம், ஆல்கஹால் போன்றவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. விவசாயத்தில் ஜீரோ பட்ஜெட் என்பது விவசாய இடுபொருட்கள் இல்லாமல் செய்யும் திட்டம் தான். இது செலவில்லாத விவசாயம் என்பது இல்லை என்றும் கூறியுள்ளார் பா.சிதம்பரம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications