"automobile" துறை வீழ்ச்சி குறித்து கவலை வேண்டாம்.. “overall sector growth” நன்றாக இருக்கிறது..

ஹைதராபாத் : ஆட்டோ மொபைல் விற்பனை சரிவு குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. இது ஒன்றும் பொருளாதார சரிவிற்கான சமிக்கை அல்ல. என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கூறியுள்ளார்.

நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் வாகன விற்பனை வீழ்ச்சியானது, பொருளாதார சரிவிற்கான முன்னோடி தான் என்று கருதப்பட்டு வரும் நிலையில், இதனை மறுத்துள்ளார் பொருளாதார நிபுனர் கிருஷ்ணமூர்த்தி.

இந்தியா, சர்வதேச அளவில் மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தியாளராகும், 2வது பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர், மேலும் 2 வது பெரிய பஸ் உற்பத்தியாளர், 5 வது பெரிய ஹெவி டிரக் உற்பத்தியாளர், 6 வது பெரிய கார் உற்பத்தியாளர் மற்றும் 8 வது வணிக வாகன உற்பத்தியாளர் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கூறியிருப்பது சற்று எதிரானதாகவே இருக்கிறது.

மொத்த ஜிடிபியில் 49% பங்கேற்பு

மொத்த ஜிடிபியில் 49% பங்கேற்பு

இந்த நிலையில் உற்பத்தி ஒவ்வொரும் வாகனத்திற்கும், ஒவ்வொரும் டிரக்கிற்கும் 13 நபர்களும், ஒவ்வொரு காருக்கும் 6 நபர்களும், ஒவ்வொரு முன்சக்கர வண்டிக்கு 4 பேரும், இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு நபரும் வேலைவாய்ப்புடனும், நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. கடந்த 2015 - 2016ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த ஜி.டி.பியில் கிட்டதட்ட 49 சதவிகிதம் வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ மொபைல்துறை உற்பத்தி துறையின் அங்கமே

ஆட்டோ மொபைல்துறை உற்பத்தி துறையின் அங்கமே

பட்ஜெட்டில் கூறியுள்ள 5 டிரில்லியன் டாலர் இலக்கு குறித்து, பேசிய செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், ஆட்டோ மொபைல் துறை என்பது, உற்பத்தி துறையின் ஒரு அங்கம், இதனால் ஆட்டோ மொபைல்துறை சிறப்பாக செயல்படாவிட்டாலும், ஒட்டுமொத்த துறை சிறப்பாக செயல்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வாகன துறை ஜி.டிபியில் கணிசமாக உள்ளது

வாகன துறை ஜி.டிபியில் கணிசமாக உள்ளது

ஆட்டோ மொபைல் துறை, உற்பத்தி துறையில் ஜி.டிபியில் கணிசமான அளவு பங்கு வகிக்கிறது. இதை மறப்பதற்கில்லை. 2009ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் வேலை குறைப்பு நடவடிக்கையை எடுக்க உள்ளனர். இதற்கு மிக முக்கிய காரணமே கார் மற்றும் இரு சக்கர வாகன விற்பனை குறைந்ததே. எனினும் இதே நேரம் உருக்கு துறை மற்ற துறைகள் நன்றாக செயல்படுகின்றன. இதனால் ஆட்டோ மொபைல் துறையில் வீழ்ச்சி குறித்து கவலைபடத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர் நலன் குறித்த சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்!

தொழிலாளர் நலன் குறித்த சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்!

ராஜஸ்தான் மாநிலத்தில் மேற்கொண்டுள்ள தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் 4 அல்லது 5 முறைகள் தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் அங்கு 100க்கும் மேற்பட்ட பணியாளர்களும், புதிய தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு தொழில் உற்பத்தி பெருகி வருவதோடு, வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகினறன என்றும் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+