இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஈட்டிய புதிய பிரிமிய வருவாய் ரூ.60,637 கோடி.. எல்.சி.ஐ தான் டாப்!

டெல்லி : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த பிரிமிய வருவாய் ரூ.60,637 கோடியாகும்.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - ஜூன் வரையிலான 2019 முதல் காலாண்டில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் 60,637 கோடி ரூபாய் பிரிமிய வருவாயை ஈட்டியுள்ளன.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஈட்டிய புதிய பிரிமிய வருவாய் ரூ.60,637 கோடி.. எல்.சி.ஐ தான் டாப்!

இந்த லிஸ்டில் இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில் மொத்தம் 24 நிறுவனங்கள் உள்ளன. எனினும் பொதுத்துறை நிறுவனவனமான எல்.ஐ.சியே இதில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் ஆன்லைன் வாயிலாகவும், காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்து வருகிறது. எனினும் தனது காப்பீட்டு வருவாயில் 94 சதவிகிதத்தினை தனது முகவர்கள் வாயிலாக மட்டுமே ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் 60,637 கோடி ரூபாய் புதிய பிரிமிய வருவாயை ஈட்டியுள்ளன. ஆனால் இதில் எப்போதும் போல எல்.ஐ.சி நிறுவனமே 44,794 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இதன் மூலம் கிட்டதட்ட 91 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் மற்ற 23 தனியார் நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக 15,842 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளன.

இதிக் கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் 2.15 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டு வருவாயோடு ஒப்பிடும்போது கிட்டதட்ட 32 சதவிகிதம் நடப்பாண்டில் அதிகமாகும்.

அதிலும் குறிப்பாக எஸ்.பி.ஐ 52 சதவிகிதம் வளர்ச்சி கண்டு 3,152 கோடி ரூபாய் பிரிமிய வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் ஐசி.ஐ.சி.ஐ புரூடென்சியல் லைப் இன்ஷூரன்ஸ் 29 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயமென்னவெனில் இந்திய காப்பீட்டுத் துறையில், ஐசிஐசிஐ புரூடென்சியல், ஐசிஐசிஐ லோம்பார்டு ஜெனரல் இன்ஷூரன்ஸ், எஸ்.பி.ஐ லைப் இன்ஷூரன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி ஸ்டாண்டர்டு லைப் உள்ளிட்ட நிறுவனங்கள் தனது பங்குகளை பங்கு சந்தையில் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+