பெங்களுரு : இந்திய அரசின் வாராக்கடன் ஜூலை 5 தேதியோடு முடிவடைந்த காலத்தில் 66,793 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 5ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில், இந்திய அரசு மத்திய வங்கியில் கிட்டதட்ட 66,793 கோடி ரூபாய் வாராக்கடனை (9.73 பில்லியன் டாலர் ) வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இதற்கு முந்தைய வாரத்தில் 6,596 கோடி ரூபாய் வாராக் கடன் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவே மாநில அரசுகளின் வாராக்கடன் ஜூலை 5ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் 5,566 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே இதற்கு முந்தைய வாரத்தில் 1,661 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் General Govt. Liabilities கடந்த 2013 - 2014ம் ஆண்டில் ரூ.75,34,356 கோடியாக இருந்தது, கடந்த 2014 - 2015ல் ரூ.94,39,242 கோடியாக அதிகரித்தது. இது 2015 - 2016ல் 1,02,91,537 கோடியாகவும், இது 2017 - 2018ல் ரூ.1,14,47,005 கோடியாக அதிகரித்துள்ளது.
இது இப்படி எனில் வங்கிகளின் வாராக்கடன் கடந்த 10 ஆண்டுகளில் 7 லட்சம் கோடி வாராக்கடன் களை வங்கிகள் ரத்து செய்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 80 சதவிகிதம் வாராக்கடன் கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கிகளின் வாராக்கடன் வங்கிகளுக்கு பிரச்சனையை கொடுப்பதோடு மட்டும் அல்லாமல், இந்திய பொருளாதாரத்திற்கே சவால் விடும் நிலைக்கு தள்ளுப்படுகின்றன.


Click it and Unblock the Notifications