தமிழ்நாடு லிஸ்டிலேயே இல்லை.. ஆந்திரா தெலுங்கானா தான் தரம் பாதுகாப்பு அதிக வேலைவாய்ப்புகளில் பெஸ்ட்

ஹைதராபாத் : அதிகளவிலான வேலைவாய்ப்புகளைக் கொடுக்கும் மாநிலங்கள், அதிலும் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பி.எஃப், இன்ஷூரன்ஸ், செலவுகள், ஊழியர்களுக்கான பென்சன் அனைத்து வகையிலும், குறிப்பாக ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் மாநிலங்களில் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா தான் முதலிடம் வகிக்கிறதாம்.

குறிப்பாக ஊழியர்களுக்கு பிடிதாற்போல் உள்ள மாநிலங்களில் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் சட்டிஸ்கர் மாநிலங்கள் தான் முன்னிலையில் இருக்கிறதாம்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் பீகார், ஒடிஷா மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தான் இதில் கடைசி இடமாக உள்ளது என்று Centre for Policy Research (CPR) என்ற அமைப்பு நடத்திய ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா & தெலுங்கானா தான் பர்ஸ்ட்!

ஆந்திரா & தெலுங்கானா தான் பர்ஸ்ட்!

இதில் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மிக பாதுகாப்பான வேலையை கொடுப்பதில் 59.3 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இதுவே மஹாராஷ்டிரா மாநிலம் 57.2 புள்ளிகளை பிடித்து அடுத்த இடத்தில் உள்ளது. சட்டீஸ்கர் 56.39 புள்ளிகளைப் பெற்று அடுத்தடுத்த இடங்களையும், இதே உத்திர பிரதேசம் மற்றும் பீகார் 37.28 புள்ளிகளைப் பெற்றும், ஒடிசா 37.70 புள்ளிகளை பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பலவற்றை ஆராய்ந்து வெளியிடபட்ட ஆய்வறிக்கை!

பலவற்றை ஆராய்ந்து வெளியிடபட்ட ஆய்வறிக்கை!

இந்த மதிப்பீட்டை செய்யும் போது, ஒவ்வொரு மாநிலத்திலத்தினுடைய வேலைவாய்ப்புகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள், வருமான சமத்துவம், பாலின சமத்துவம், இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என அனைத்தும் ஆராயப்பட்டே, பின் இந்த ஆய்வறிக்கையின் மூலம் இந்த மதிப்பீடு செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

பாலின சமத்துவத்திற்கு முக்கியத்துவம்!

பாலின சமத்துவத்திற்கு முக்கியத்துவம்!

மேலும் இந்த ஆய்வாளர்கள், நேஷனல் சேம்பிள் சர்வே ஆர்கனைசேஷன், தி லேபர் பியூரோ, the Annual Survey of Industries, இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தொழிலாளர் குறித்த ஆய்வு, இதன் அடிப்படையில் மேற்கொண்ட இந்த ஆய்வின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பாலின சமத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் ஆந்திர பிரதேசம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் இல்லை

பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் இல்லை

குறிப்பாக பெண்கள் மத்தியில் அதிக வேலைவாய்ப்பின்மை குறித்த மாநிலங்களில் கோவா 13.9 புள்ளிகளும், கேரளா 11.4 புள்ளிகளும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆய்வறிக்கையில் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்த போதிலும் கூட, வேலைவாய்ப்பு உருவாக்கம் மெதுவாக இருப்பதாகவும், மிக சீரற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பெண்கள் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் இந்தியாவுக்கு 120வது இடம்.

பெண்கள் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் இந்தியாவுக்கு 120வது இடம்.

அதிலும் கடந்த 2017 - 2018ம் ஆண்டில் இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்புற வேலையின்மை விகிதம் முறையே 5.3 சதவிகிதமாகவும், 7.8 சதவிகிதமாகவும் இருந்ததாகவும் கூறியுள்ளது இந்த அறிக்கை. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்கும் விகிதத்தில், இந்தியா 131 நாடுகளில், 120 இடத்திலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்களில் 4ல் ஒருவரே தொழிலாளர் சந்தைக்குள் வருகிறார்

பெண்களில் 4ல் ஒருவரே தொழிலாளர் சந்தைக்குள் வருகிறார்

அதிலும் The PLFS வெளியிட்டுள்ள தரவின் படி, 15 வயதிற்கும் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் , நான்கில் ஒருவரே 23.3 சதவிகிதமே தொழிலாளர் சந்தையில் நுழைகிறார்களாம். இதில் சிறிய பிரதேசமாக இருந்தாலும் இமாச்சலப் பிரதேசம் தான் 72.9 சதவிகித இடத்தை பிடித்து முதலிடத்தில் உள்ளதாம். இதுவே பாலின சமத்துவத்தில் முதலிடத்தில் உள்ளனவாம், இதில் பீகார் 13.5 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளதாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+