கொல்கத்தா, மேற்கு வங்கம்: பொதுவாக இந்தியா முழுமைக்கும் டெக்ஸ்டைல் நூற்பாலைகள் 24 * 7 (வாரம் ஏழு நாட்களும், ஒரு நாளில் 24 மணி நேரமும்) இயங்கும். இப்போது இந்தியாவில் அளவுக்கு அதிகமான டெக்ஸ்டைல் நூற்பாலைகள் இருக்கிறதாம். அதோடு சர்வதேச சந்தைகளில் நூல்களுக்கான தேவையும் குறைந்து கொண்டே வருகிறதாம்.
இதனால் ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் நூல்களை விற்க முடியாமல் தயாரித்த நூல்கள் தேங்கி குடோன்களில் கிடக்கிறதாம். ஆகையால் வட இந்தியாவில் டெக்ஸ்டைல் நூற்பாலைகளை, இனி வாரம் ஒரு நாள் நிறுத்தப் போவதாக வட இந்திய டெக்ஸ்டைல் நூற்பாலைகள் சங்கத்தின் (NITMA - Northern India Textile Mills Association) தலைவர் ராஜிவ் கார்க் சொல்லி இருக்கிறார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் டெக்ஸ்டைல் நூற்பாலை நூல்களுக்கு சீனா தான் கடந்த சில ஆண்டுகளாக பெரிய வியாபாரத்தைக் கொடுத்துக் கொண்டிருந்ததாம். இப்போது சில மாதங்களாக சீனா, வழக்கமான அளவுகளில் இந்திய நூற்பாலை நூல்களுக்கு ஆர்டர் கொடுப்பது இல்லையாம். சீனா என்கிற ஒரு நாட்டின் மறுப்பினால் மட்டும் இந்திய டெக்ஸ்டைல் நூற்பாலைகளில் தயாரித்து, கேட்கும் ஆட்களுக்கு அனுப்பும் நிலையில் ஏகப்பட்ட சரக்குகள் தேங்கிக் கிடக்கிறதாம்..
ஏற்கனவே இந்தியாவில் போதுமான நூல் தேவை இல்லாதது மற்றும் சர்வதேச சந்தைகளில் இருக்கும் சுணக்கம் காரணமாக டெக்ஸ்டைல் நூற்பாலை நூல்கள் விற்க முடியாமல் தேங்கிக் கொண்டு தான் இருந்ததாம். ஆனால் இப்போது சீனாவும் ஆர்டர் கொடுக்க மறுப்பதால் இந்த தேக்கம் பெரிய அளவில் அதிகரித்துக் கொண்டே போகிறதாம். இதனால் இந்திய டெக்ஸ்டைல் நூற்பாலைகள் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறதாம்.
ஏகப்பட டெக்ஸ்டைல் நூற்பாலைகள் தங்களுக்கு முழு உற்பத்தி திறனில் வெறும் 50% உற்பத்தியைக் கூட செய்யாமல் ஏனோ தானோ என டெக்ஸ்டைல் நூற்பாலைகளை நடத்தி வருகிறார்களாம். இந்த நஷ்டத்தைச் சமாளிக்க, வாரம் ஒரு முறைக்கு மேல் கூட டெக்ஸ்டைல் நூற்பாலைகளுக்கு விடுமுறை விட யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். அதோடு தினசரி உற்பத்தியை குறைப்பது பற்றியும் யோசித்து வருகிறார்களாம். இந்த நிலை அடுத்த சில மாதங்களுக்கு தொடரும் எனவும் இந்திய டெக்ஸ்டைல் நூற்பாலைகள் சங்கம் (NITMA - Northern India Textile Mills Association) தங்கள் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications