டெல்லி : ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) வந்த பிறகு மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் காண தொட்ங்கின. அதிலும் பல நிறுவனங்கள் காணமல் போயின. சில நிறுவனங்கள் மட்டும் இருக்கும் நிலையில் முடிந்த அளவுக்கு ஜியோவுடன் போட்டி போட்டு போண்டியாதானது தான் மிச்சம்.
ஆமாங்க.. ஜியோவுக்கு சமமாக போட்டி போட நினைத்து பல சலுகளைகளை ஜியோவைப் போலவே வாரி இறைத்தன. எனினும் ஒரு கட்டத்தில் நஷ்டங்களை காணவே சலுகைகள் சற்றே குறைந்து விட்டன என்றே கூறலாம்.

இந்த நிலையில் CLSA வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ்ஸின் ஜியோ போஸ்ட்பெய்டு கட்டணத்தினை விட, பார்தி ஏர்டெல், வோடபோன் கட்டணங்கள் 1.5 - 2 மடங்கு அதிகமாக உள்ளதாக இந்த அறிக்கைகள் கூறுகின்றன.
ஜியோவின் கட்டணங்கள் சீரான பங்கு ஆதாயங்களை காட்டினாலும், அதன் போஸ்ட்பெய்டு திட்டத்தில் விலை அதிகரிக்கப்படவில்லை.
இதே ஜியோவுடன் ஒப்பிடும்போது பார்தி ஏர்டெல், வோடபோன் போஸ்ட்பெய்டு கட்டணங்கள் அதிகமாக இருப்பதையே பார்க்க முடிகிறது.
இதே பார்தி ஏர்டெல் தனது பொஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களை அதிகரித்துள்ள அளவிற்கு, வோடபோனுக்கு அதிகரிக்க வில்லை என்றே கூறலாம்.
இதேபோல வருவாய் வாடிக்கையாளர்களை அதிகரித்து வருவதில் ஜியோ, பார்தி ஏர்டெல் முன்னிலை வகித்து வருகிறது. சந்தை இது இரு நிறுவனங்களுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது.
அதிலும் ஜியோ மிக மலிவான விலையில் போஸ்ட்பெய்டு திட்டத்தினை வழங்கி வருகீறது. குறிப்பாக 25 டேட்டா வெறும் 199 ரூபாய்க்கு தருகிறது ஜியோ.
இதே பார்தி ஏர்டெல் 4 போஸ்ட் பெய்டு திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக 499 ரூபாய் முதல் 1599 ரூபாய் வரையில் வைத்துள்ளது. மேலும் 399 ரூபாய்க்கு 40 ஜிபி டேட்டாக்களை கொடுத்து வருகிறது.
இதே வோடபோன் 30 ஜிபி டேட்டாக்களை 299 ரூபாய்க்கும் கொடுத்து வருகிறது. எப்படொய் எனினும் ஜியோவின் வருகைக்கு பின்னர் இந்த இரு நீறுவனங்களுமே நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், பார்தி ஏர்டெல் ஒரளவு வாடிக்கையாளர்களை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications