24/7 மணிநேர தடையற்ற மின்சாரத்திற்கு புதிய பல திட்டங்கள்.. விரைவில் prepaid smart meter திட்டம்!

டெல்லி : பிரதமர் மோடி கடந்த முறை ஆட்சி அமைத்த போதே மின்சார மீட்டர்களை "prepaid smart meter" ஆக மாற்ற அதிரடியான பல முயற்சிகளை எடுத்து வந்தது.

ஆனால் பொருளாதார நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் இன்று செயல்படுத்தப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சிக்கலில் உள்ள மின்சாரத் துறையின் நிதியினை மேம்படுத்தவும், அதோடு மின்சார துறையில் உள்ள சிக்கல்களை மேம்படுத்தவும் இந்த "ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்" திட்டத்தினை தேசிய ஜன நாயக கூட்டணியிலான அரசாங்கம் அடுத்த 2022ம் ஆண்டுக்குள் கட்டாயம் இத்திட்டத்தினை செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24/7 மணி நேரம் மின்சாரத்திற்கு முயற்சி

24/7 மணி நேரம் மின்சாரத்திற்கு முயற்சி

மத்திய மின்சார துறை ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டமானது, இடையில்லா மின்சார வினியோகத்தின் ஒரு திட்டமாகும். எனினும் தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்த புதிய அரசு 24/7 மணி நேரமும் அனைவருக்கும் தடையில்லா மின்சாரத்தினை வழங்கும் நோக்கத்தில் இத்திட்டத்தினை முடுக்கி விட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

எதற்கு ஸ்மார்ட் மீட்டர்?

எதற்கு ஸ்மார்ட் மீட்டர்?

இந்த "ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்" ஆனது, மின்சாரம் திருட்டு, மின் கட்டண பில்களில் குளறுபடி உள்ளிட்ட புகார்கள் மற்றும் குறைபாடுகளை தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும், முன்பே பணம் செலுத்தி, பயன்படுத்தும் வகையிலான, 'பிரீபெய்டு' மின் கட்டண மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் மனித அளவீட்டு பில்லிங் மற்றும் சேகரிப்பது குறித்தான செயல்பாட்டினைக் குறைக்கிறது. இதனால் இது திருட்டை அடையாளம் காண முடியும் என்றும் கருதப்படுகிறது.

ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் வரைவுத் திட்டம்

ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் வரைவுத் திட்டம்

ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் வரைவுத் திட்டமானது மத்திய மின்சார துறையின் மூலம் தயாரிக்கபட்டு, தற்போது மத்திய அரசின் தேசிய மின்சாரத் திட்டத்தின் உதவியுடன், தற்போது வரை மின்சார துறைக்கான முன்னோக்கு திட்டங்களை தயாரித்து வருகிறது. இந்த திட்டமானது மக்களை கருத்தில் கொண்டே தயாரிக்கப்படுகிறது என்றும் மின்சார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிதிப்பிரச்சனையின் காரணமாக தாமதமாக கட்டணம்!

நிதிப்பிரச்சனையின் காரணமாக தாமதமாக கட்டணம்!

தற்போது இன்றைய இளைய தலைமுறையில் நிலவும் மோசமான பொருளாதார பிரச்சனை காரணமாக மின்சார கட்டணங்கள் மிக மொதுவாக கட்டப்படுகின்றன. இது சங்கிலி தொடராக மின்சார துறையினை பாதிக்கிறது. அதோடு இந்த மோசமான கட்டண பதிவுகள் மின் உற்பத்தி நிறுவனங்களை மோசமாக பாதித்தது மட்டுமல்லாமல் வங்கித்துறையிலும் ஒரு அழுத்தத்தினை கொடுக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

பிரச்சனையில் மின்சார துறை

பிரச்சனையில் மின்சார துறை

ஒரு புறம் அனைத்து துறைகளும் நிதி பிரச்சனையால் தள்ளாடும் நிலையில், மின்சார துறை சுமார் 1 டிரில்லியன் ரூபாய், சுமார் 66 ஜிகாவாட் பல்வேறு அளவிலான நிதி அழுத்தங்களை எதிர்கொள்கிறது. அதோடு இந்த ஸ்மார்ட் அளவீடு நுகர்வோருக்கு மின்சாரத்தை மிச்சப்படுத்தவும், மின்சார பயன்பாட்டை தங்களுக்கு உகந்தவாறு திட்டமிடவும் இந்த கருவி உபயோகமானதாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

துணை மின் நிலைய திறனை அதிகரிக்கும்

துணை மின் நிலைய திறனை அதிகரிக்கும்

இந்த திட்டம் 2022ம் ஆண்டளவில் வினியோக துணை மின் நிலைய திறனை 38 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் அரசு நம்புகிறதாம். அதோடு மின்வாரிய மந்திரி ராஜ்குமார் சிங், மின் வாரிய அமைச்சின் முக்கிய குழுவினருக்கு மின் துறை சீர்திருத்தங்கள் 2.0 குறித்து ஆய்வு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளாராம். மேலும் இந்த திட்டம் வெளியிடப்படுவதற்கு முன்பே, ஒரு முன்னோக்கு திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+