மும்பை : ஒரு புறம் எந்த தொழிலை ஆரம்பித்தாலும், அதில் கொடி கட்டி பறக்கும் அண்ணன் முகேஷ் அம்பானி, மறுபுறம் எது எடுத்தாலும் தோல்வியை மட்டுமே கண்டு வரும் அனில் அம்பானி. எனினும் குடும்ப சொத்து இல்லையா, அதனால் தங்களது குடும்ப சொத்துக்களை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்றும், மேலும் இந்த நிறுவனத்தை கையக்கப்படுத்த முகேஷ் அம்பானிக்கே வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு புறம் சந்தை மூலதனத்தில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மறுபுறம் திவால் நிலையில் உள்ள தனது சகோதரர் நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ஏலத்தில் எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆமாங்க.. திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தினை ஏலத்தில் எடுக்க, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கருத்துகள் வெளியாகியுள்ளன.
முகேஷ் அம்பானிக்கு கையகப்படுத்துதல் முக்கியமானது?
ஒரு புறம் முகேஷ் அம்பானிக்கு, இந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தினை ஏலத்தில் எடுப்பது மிக அவசியமானதாகும். இது கையகப்படுத்துதல் மூலம் இது முகேஷ் அம்பானிக்கு இரண்டு விதங்களில் சாதகமானதாக அமையும். ஒன்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ஏர் அலைகள் மற்றும் கோபுரங்கள் என அனைத்தும், 5ஜியில் அடியெடுத்து வைக்கும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மிக உபயோகமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
எப்படியும் அண்ணன் முகேஷ் வாங்கிவிடுவார்!
அதே நேரம் திவாலான நிறுவனமான இந்த நிறுவனம், திருபாய் அம்பானியால் 90களில் கையகப்படுத்தப்பட்ட ஐசிஐ பாலியெஸ்டர் நிறுவனத்தை, வணிக நோக்கங்களுக்காக வாங்கப்பட்ட முன்னேற்றங்களுக்கு நெருக்கமான ஒரு நிறுவனமாகும் என்றும் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளாராம். இதனால் ரிலையன்ஸ் குழுமத்திற்கு முன்னேற்றத்தினை கொடுத்த ராசியான நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நேரத்தில் ஆர் காம் நிறுவனத்திற்கு கிட்டதட்ட 46,000 கோடி ரூபாய் கடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆக இந்த நிறுவனத்தினை முகேஷ் அம்பானி எப்படியும் வாங்கிவிடுவார் என்ற கருத்தே நிலவி வருகிறது.
ஏற்கனவே தம்பிக்கு உதவிய அண்ணன்!
ஏற்கனவே தனது தம்பி அனில் அம்பானியின் கடன் தொகையை செலுத்தி, அவர் சிறை தண்டனையை தவிர்க்க உதவி இருந்தார் அண்ணன் முகேஷ் அம்பானி. தொலைத் தொடர்பு நிறுவனமான எரிக்சனோடு, ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாக்கிய ஒப்பந்தம் ஒன்று முறிந்த பின்னர் அது தொடர்பான குற்றச்சாட்டை அனில் அம்பானி எதிர்கொண்ட நிலையில், எரிக்சன் நிறுவனத்திற்கு 5.5 பில்லியன் ரூபாய் வழங்க வேண்டியதை நீதிமன்ற காலக்கெடு முடிவதற்கு முன்பு, ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தனது சகோதரர் அனில் அம்பானிக்கு முகேஷ் அம்பானி உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்.காமை பயன்படுத்தி வரும் முகேஷ் அம்பானி!
ஏற்கனவே ஆர்.காமை பயன்படுத்தி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், முன்னரே மும்பை உள்ளிட்ட 21 வட்டங்களில் 850 மெகா ஹெர்ட்ஸ் ஏர்வேஸை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 18,000 கோடி மதிப்புள்ள 43,000 தொலைத் தொடர்பு கோபுரங்கள் மற்றும் இந்த நிறுவனத்தீன் பிற வயர்லெஸ் கட்டமைப்புகளை வாங்க ஒப்புக் கொண்டது கவனிக்கதக்கது. இந்த நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தினை கையகப்படுத்துவது மிக முக்கியமானதாக முகேஷ் அம்பானிக்கு இருக்கும்.
சொத்துக்களை கூட விற்க முடியவில்லை!
ஓரு புறம் கடன் பட்டாலும், அதனை தனது சொத்துக்களை விற்றாவது கடனை கட்ட ஒப்புக் கொண்டார் அனில் அம்பானி. இந்த நிலையில் அனில் அம்பானி தனது சொத்துக்கு சொத்தாக இருந்த சொத்துக்களை விற்க முயன்றார். ஆனால் அதுவும் முடியாமல் போகவே தற்போது திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்த நிறுவனம்.
ரூ.88,000 கோடி இருக்கலாம்!
இந்த நிலையில் ஜூலை 23ம் தேதியன்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் திவால் நிலை குறித்த தகவல்களை Resolution Professional சமர்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரிலையன்ஸ் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ரடெல் ஆகியவற்றின் மொத்தக் கடன் 88,000 கோடி ரூபாய் கடனைக் கடனாளிகள் கோரியுள்ளனராம்.
ரிலையன்ஸ் ஜியோவுக்கு மட்டுமே நிதி வலிமை உண்டு!
நாளுக்கு நாள் தொழில் நுட்பம் மாறிக் கொண்டிருக்கும் துறையில், தேய்மானமும் அதிகம் இருப்பதால், வங்கிகள் ஆர். காம் விஷயத்தில் மிகக் குறைந்த விலையை நிர்ணயிக்க வேண்டியிருக்கும் என்ற நிலையில். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு மட்டுமே இந்த சொத்துக்களை கையகப்படுத்தும் அளவுக்கு நிதி வலிமை உண்டு என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறதாம்.


Click it and Unblock the Notifications