டெல்லி : ஒரு புறம் ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வந்தாலும், மறுபுறம் ரயில்வே துறையின் உள்கட்டமைப்புகளில் முதலீடும் செய்து வருகிறது மத்திய அரசு. இந்த நிலையில் பயண நேரத்தை குறைப்பதற்காக, Railways 100-day plan மூலம் ரூ.13,500 கோடி முதலீடு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆமாங்க.. பயண நேரத்தை குறைக்கும் முயற்சியில், இந்திய ரயில்வே தனது 100 நாள் செயல் திட்டத்தின் கீழ் டெல்லி - மும்பை மற்றும் டெல்லி - ஹவுரா வழித்தடங்களில் பயண நேரத்தினை குறைக்க 13,500 கோடி முதலீட்டினை செய்ய திட்டமிட்டுள்ளதாம் அரசு.
நிஜம்தாங்க.. ரயில்வே தனது 100 நாள் திட்டத்தில் தயாரித்த 11 திட்டங்களில் இதுவும் ஒன்றாம். இந்த திட்டத்தினை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் செயல்படுத்த திட்டம்!
ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் இது குறித்து கூறியுள்ள அறிக்கையில், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஒப்புதல் அளித்த இந்த திட்டத்தினை, அடுத்த நான்கு ஆண்டுகளில் டெல்லி - மும்பை மற்றும் டெல்லி - ஹவுரா இடையேயான பரப்பரப்பான பாதைககளில் ரயில் வேகத்தை 160 கிமீ ஆக உயர்த்த ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அரசு ரூ.13,500 கோடி முதலீட்டினை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வேகத்தை அதிகரிப்பதன் மூலம் பயண நேரம் குறையும்!
இந்த பரப்பரப்பான ரயில் பாதையில் வேகத்தை அதிகரிப்பதன் மூலம், டெல்லி - மும்பை, டெல்லி - ஹவுரா பயண நேரங்கள் முறையே 12 மணி நேரம் மற்றும் 10 மணி நேரமாகக் குறைக்கப்படும் என்றும், இந்த நேரங்கள் தற்போது முறையே 17 மணி நேரம் மற்றும் 15.5 மணி நேரமாக உள்ளது என்றும் கூறியுள்ளார் ரயில்வேயின் இந்த மூத்த அதிகாரி.
என்ன வேகம்?
தற்போது இந்த இரு வழித்தடங்களிலும் அதிகபட்ச வேகமாக 30 சதவிகித பயணிகள் ரயிலும், 20 சதவிகித சரக்கு போக்குவரத்து ரயிலும் 130 கிமீ வேகத்தில் தான் செல்கின்றனவாம். ஆக இந்த திட்டத்திற்கு அடுத்த 100 நாட்களில் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும், இந்த திட்டம் பொருளாதார விவகாரங்களுக்காக அமைச்சரவை குழுவுக்கு ஒப்புதலுக்காக அனுப்படும் என்றும் கூறப்படுகிறது.
எங்கே? எவ்வளவு தூரம்?
1,525 கி.மீ தூரமுள்ள டெல்லி - ஹவுரா பாதையில் வேகத்தை மேம்படுத்த 6,684 கோடி ரூபாயும், இதுவே 1,483 கி.மீ தூரமுள்ள டெல்லி - மும்பை பாதைக்கு 6,806 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாகவும், இந்த முழு திட்டமும் ஒப்புதல் பெறப்பட்ட பின் நான்கு ஆண்டுகளில் செயல்படுத்த உள்ளதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Rajdhanis and Shatabdis தனியாருக்கு விடலாம்?
இந்த திட்டம் செயல்படுத்தப்படும் இந்த நிலையில், Rajdhanis and Shatabdis இந்த இரு ரயில்களும் தனியாருக்கு விடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம். ஆமாங்க.. முக்கிய சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய இந்த இரண்டு ரயில்கள், குறைந்த நெரிசலான பாதைகளில், முக்கிய நகரங்களை இணைக்கிறது. இந்த நிலையில் இந்த இரு ரயில்களும் தனியாருக்கு ஒதுக்கப்படலாம் என்றும், அடுத்த 100 நாட்களில் இதற்கான முன்மொழிவுக் கோரிக்கை மேற்கோள் கோரிக்கை வழங்கப்படலாம் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறதாம்.
இன்னும் பல திட்டங்களில் முதலீடு
இந்த 100 நாள் திட்டத்தில் மொத்தம் 6,485 ரயில் நிலையங்களில் வைபை இணைய இணைப்பை வழங்குவது பற்றி முன்மொழியப்பட்டிருந்தது. இதில் அடுத்த 100 நாட்களில் மீதமுள்ள 4,882 ரயில்வே நிலையங்களில் வைபை இணைப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
50 ரயில் நிலையங்களை மறுசீரமைத்தல்
இதில் 50 ரயில் நிலையங்களை மறுசீரமைகக் 100 சதவிகித முதலீடு செய்யப்படும் என்றும், இதற்காக 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும், அதோடு 2,563 லெவல் கிராசிங்குகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications