டெல்லி : நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டாபர் இந்தியா தனது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் 10.3 சதவிகிதம் அதிகரித்து, லாபம் 363 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வாடிக்கா ஹேர் ஆயில் தயாரிப்பாளராரும் மற்றும் பாபூல் டூத்பேஸ்ட் தயாரிப்பாளருமான இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய், கடந்த ஜூன் முதல் காலாண்டில் வருவாய் 9.1 சதவிகிதம் அதிகரித்து, 2273 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதுவே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2081 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கிராமப்புறங்களில் அதிகளவு வினியோகத்தாலும், முக்கிய பொருட்களில் அதிகளவு முதலீடு செய்தலாலும் தான் இந்த லாபம் அதிகரிப்பு என்று இந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதே உள் நாட்டில் இந்த எஃப்.எம்.சி.ஜி பொருட்களின் விற்பனை 9.6 சதவிகிதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்த தேவையில் மந்தநிலை மற்றும் போட்டி தீவிரமாக அதிகரித்து இருப்பதால் மேக்ரோ பொருளாதார சூழல் தொடர்ந்து சவாலாக இருக்கும்போது கிராமப்புற இந்தியாவில் எங்களது கிராமப்புற இந்தியாவில் எங்கள் வினியோக விரிவாக்கம் மூலோபாயத்தை நாங்கள் சிறப்பாக செயல்படுத்தியுள்ளோம்.
இதன் காரணமாக எங்கள் செயல்திறன் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் தலைவர் மோஹித் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து இந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி, இதன் மூலம் நாங்கள் ஒரு வலுவான லாபகரமான வளர்ச்சிக்கு நாங்கள் அடித்தளமிட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
அதிலும் ஹெல்த் சப்ளிமென்ட்ஸ் வணிகத்தில் கடந்த காலாண்டில் 19.6 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளோம் என்றும், இதோடு செரிமான வகை பொருட்களான ஹஜ்மோலா மற்றும் புடின் ஹாரா 18 சதவிகித லாப வளர்ச்சியையும் கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதே ஆயுர்வேத நெறிமுறை வணிகம் 14.5 சதவிகிதமும், இதே ஹேர் ஆயில் 12..1 சதவிகிதமும், தோல் பராமரிப்பு பிரிவு 12 சதவிகிதமும், டுத்பேஸ்ட் பிரிவு 11.4 சதவிகிதமும் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது இந்த நிறுவனம்.
இதே டாபரின் சர்வதேச வணிகம் 7.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications