ஜெட் ஏர்வேஸின் மொத்த கடன் ரூ.24,887 கோடி.. விடாமல் தொடரும் கடன் பிரச்சனை..!

மும்பை : அடுத்தடுத்த கடன் பிரச்சனையால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை முழுவதுமாக நிறுத்தி விட்டாலும், அதன் தொகை என்னவோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

ஆமாங்க.. ஜெட் ஏர்வேஸின் பங்குகளை விற்க, ஸ்டேட் பேங்க் தலைமையிலான குழு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொண்டே வந்தாலும், பிரச்சனைகள் ஓய்ந்தபாடாக இல்லை. அதோடு கடன் பிரச்சனையும் முடிந்த பாடாக இல்லை.

ஜெட் ஏர்வேஸின் மொத்த கடன் ரூ.24,887 கோடி.. விடாமல் தொடரும் கடன் பிரச்சனை..!

கடந்த வியாழக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்த கடன் தொகை 24,887 கோடி ரூபாயாக உள்ளதாம். இது இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குபவருக்கு பெரிய இடறாகவே அமையும் என்பதால் இன்று வரை, ஜெட் ஏர்வேஸை பங்கினை வாங்க யாரும் முன்வரவில்லை எனலாம்.

திவால் தீர்மானத்தின் மூலம் தனது கடன் தொகையை பெறுவதற்கான முதல் உரிமைக் கொண்ட நிதிக் கடன் வழங்கு நர்கள் 10,231 கோடி ரூபாயும், இதுவே செயல்பாட்டுக் கடன் 2,400 கோடி ரூபாயும், செயல்பாட்டு கடன் வழங்குனர்கள் 12,372 கோடி ரூபாயும் கோரியுள்ளனராம்.

ஜெட் ஏர்வேஸின் தீர்மான நிபுணர் 24,887 கோடி ரூபாயில், 8,462.79 கோடி உரிமைக் கோரல்களை ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் 15,044 கோடி ரூபாய் சரி பார்ப்பில் உள்ளது என்றும், சுமார் 1,380.82 கோடி ரூபாய்க்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

எந்த வொரு முதலீட்டாளரும் இந்த மாதிரியான அதிகப்படியான கடனை ஏற்க விரும்ப மாட்டார்கள். அதிலும் செயல்பாட்டு கடனாக கூறும் 12,000 கோடி ரூபாய் கடன் கோரிக்கைகளை யாரும் ஏற்க மாட்டார்கள் என்றும் மற்ற விமான நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகின்றனராம்.

இந்த நிலையில் நிதிக் கடனாளிகள், செயல்பாட்டுக் கடன் வழங்குனர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள், பிற கடன் வழங்குனர்களிடமிருந்து பெறப்பட்ட 16,643 உரிமைக் கோரல்களில், 33 பேர் மட்டுமே இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் இடைக்கால நிதியாக செலுத்தமா என்பதை தீர்மானிக்க, மின்னணு வாக்குபதிவை நடத்திய பின்னர் ஜெட் கடன் வழங்குனர்கள் கூடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+