Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அப்படிபட்ட மீன்களைத் தான் நாம் இன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிரோம் எனச் சொல்கிறது மத்தியப் பிரதேசத்தில், ஜபல்பூர் நகரில் உள்ள மீன் வளர்ப்பு அறிவியல் கல்லூரி (College of Fishery Science, Jabalpur).

 

மனிதர்கள் அலட்சியமாக இரும்பில் தொடங்கி பிளாஸ்டிக் வரை, கண்ட கண்ட குப்பைகளை எல்லாம், தண்ணீரில் தூக்கிப் போடுவதால் அளவுக்கு அதிகமாக நீர் மாசடைவதோடு மட்டும் இல்லாமல் அதில் வாழும் மீன்களுக்கும் தோல் புற்றுநோய் (Skin Cancer) வந்து, மீன்கள் இறப்பாதாக ஆராய்ச்சி செய்து சொல்லி இருக்கிறார்கள்.

 
Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..?

மீன்கள் வாழும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக மாசுபடுத்தி, அந்த மீன்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கூட இல்லாத அளவுக்கு போவதால் தான் குளம், குட்டை போன்ற நீர் தேங்கி இருக்கும் தளங்களில் உள்ள மீன்களுக்கு Cancer வருகிறதாம்.

ஆறுகளில் போதுமான மணல் இல்லாததால் தண்ணீர் இயற்கையாக வடிகட்டப்படாமல் ஆறுகளில் ஓடுகிறதாம். இதனாலும் மீன்களுக்கு நீரில் இருக்கும் மாசுபாடு அதிகரித்து எளிதில் Cancer வந்து விடுகிறதாம். இந்த Cancer ஒரு குறிப்பிட்ட இன மீன்களுக்கு மட்டும் தான் வரும் என்று இல்லையாம். எல்லா வகையான மீன்களுக்கும் இந்த நோய் தொற்று இருக்கிறதாம்.

கடந்த 4 ஆண்டுகளில் மத்தியப் பிரதேசத்தின் மண்ட்லா, திந்துரி, செயோனி, பலகாட், ஜபல்பூர், ரெவா என பல பகுதிகளில் ஆறு மற்றும் குளம் ஆகிய இரண்டு இடங்களில் இருந்து ஏகப்பட்ட இறந்த மீன்களைப் பரிசோதித்த போது, அதிகப்படியான மீன்கள் தோல் புற்றுநோயால் இறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு மீன்களை Cancer எளிதில் தாக்குவதையும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இதை எல்லாம் விட நமக்கு பயத்தைக் கொடுக்கும் விஷயம் என்னவென்றால், ஒரு மீனுக்கு Cancer வந்தால் அது, அந்த மீன் பழகும் மொத்த கூட்டத்துக்கும் பரவுவதையும் கண்டு பிடித்திருக்கிறார்கள். இப்படி Cancer வந்து இறந்த மீனை உண்டால், கடுமையான வாந்தி, வயிற்று வலி, கடுமையான வயிற்றுப் போக்கு என பல உடல் உபாதைகளுக்கு ஆள் ஆவர்கள் எனவும் எச்சரித்திருக்கிறது ஜபல்பூர் மீன் வளர்ப்பு அறிவியல் கல்லூரி.

இதனால் மீன்களை தேங்கிய குட்டை குளங்களில் வளர்த்து ஏற்றுமதி செய்பவர்களுக்கு பெரிய பிரச்னை காத்திருப்பதாகச் சொல்கிறார்கள் மீன் வளர்ப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் வியாபாரிகள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

cancer in fishes reason water pollution

cancer in fishes reason water pollution
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X