மும்பை: HDFC Bank-ன் காலாண்டு முடிவுகள் இன்று (ஜூலை 20, 2019) வெளியாகி இருக்கின்றன. HDFC Bank-ன் நிகர லாபம், கடந்த ஜூன் 2018 காலாண்டை விட இந்த ஜூன் 2019 காலாண்டில் சுமார் 21 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம்.
HDFC Bank-ன் நிகர லாபம் இந்த ஜூன் 2019-ல் 5,568 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூன் 2018-ல் இதே HDFC Bank-ன் நிகர லாபம் 4,601 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

HDFC Bank-ன் நிகர வட்டி வருமானமும் நிகர லாபம் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. HDFC Bank-ன் நிகர வட்டி வருமானம் இந்த ஜூன் 2019-ல் 13,294 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூன் 2018-ல் இதே HDFC Bank-ன் நிகர வட்டி வருமானம் 10,813 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
HDFC Bank-ன் தோராய வாராக் கடன் அளவு ஜூன் 2019 காலாண்டுக்கு 1.40 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. ஆனால் மார்ச் 2019 காலாண்டில் இது 1.36 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல நிகர வாராக் கடன்களின் அளவும் ஜூன் 2019-ல் 0.43 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் 2019 காலாண்டில் HDFC Bank-ன் நிகர வாராக் கடன் 0.39 சதவிகிதமாக இருந்தது என்பதும் கவனிக்கத் தக்கது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, HDFC Bank-ன் சொத்து அளவு இந்த ஜூன் 2019 காலாண்டில் 12,65,253 கோடி ரூபாய் மதிப்புள்ள பெரிய வங்கியாக நிமிர்ந்து நிற்கிறது. இதுவே கடந்த ஜூன் 2018-ல் 10,80,409 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒரு வருட காலத்தில் HDFC Bank-ன் சொத்து மதிப்பு சுமார் 17 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்பதை எளிதில் கடக்க முடியவில்லை. மற்ற இந்திய வங்கிகள் அன்றாட வேலைகளைச் செய்து கொள்ள போராடிக் கொண்டிருக்கும் போது, HDFC Bank மட்டும் 17 சதவிகித வளர்ச்சியைக் காட்டி இருப்பது பெரிய சாதனையாகவே பார்க்கிறார்கள் அனலிஸ்டுகள்.
ஆக வரும் திங்கட்கிழமை, வர்த்தகம் தொடங்கும் போதே இந்த 21 சதவிகித நிகர லாபத்துக்கான ஏற்றத்தை HDFC Bank பங்குகள் காணும் என எதிர்பார்க்கலாம்.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications