Mukesh ambani-க்கே 11 வருஷமா சம்பள உயர்வு இல்லையா..? என்னய்யா சொல்றீங்க..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் Mukesh ambani-க்கு கடந்த 11 ஆண்டுகளாக சம்பள உயர்வே இல்லையாம்.

கார்ப்பரெட் இந்தியாவில், நிறுவன உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் அதிக சம்பளம் பற்றி கடந்த 2008 - 09 நிதி ஆண்டில் பெரிய விவாதங்கள் எழுந்தது.

நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரிகள் (CEO), முதன்மைச் செயல்பாட்டு அதிகாரிகள் (COO), முதன்மை நிதி அதிகாரிகள் (CFO), நிறுவன இயக்குநர்கள் (Board of Directors) போன்ற முக்கிய பதவிகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் அளவுக்கு அதிகமான சம்பளம் பற்றி பெரிய விவாதம் அது.

Pakistan Airspace: பாகிஸ்தானால் ரூ. 1600 கோடி நட்டத்தை தாங்க முடியாமல் இந்திய விமானங்களுக்கு அனுமதி! Pakistan Airspace: பாகிஸ்தானால் ரூ. 1600 கோடி நட்டத்தை தாங்க முடியாமல் இந்திய விமானங்களுக்கு அனுமதி!

நிர்ணயம்

நிர்ணயம்

அந்த விவாத காலத்தில் தான் Mukesh ambani, தான் ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என தன் சம்பளத்தை (சம்பளம் (Salary), படிக் காசுகள் (Allowances), கமிஷன் (Commission), மற்ற சலுகைகள் (Perquisites))15 கோடி ரூபாயாக நிர்ணயித்துக் கொண்டாராம். அதன் பின் இந்த 2018 - 19 நிதி ஆண்டு வரை அதே 15 கோடி ரூபாயைத் தான் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறாராம். இவர் தகுதிக்கும், வேலைக்கு இவர் இன்னும் 24 கோடி ரூபாய் கூடுதலாக சம்பளமாக வாங்கிக் கொள்ள முடியும் எனவும் கார்ப்பரெட் வட்டாரங்கள் சொல்கிறது.

எவ்வளவு சம்பளம்

எவ்வளவு சம்பளம்

Mukesh ambani கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் சம்பளம் & சலுகைகளாக (Salary & Allowance)4.45 கோடி ரூபாய், கமிஷனாக (Commission) 9.53 கோடி ரூபாய், மற்ற சலுகைகளாக (Perquisites) 31 லட்சம் ரூபாய், ஓய்வூதியமாக நலன்களுக்கான நிதியாக (Retirement Benefits) 71 லட்சம் ரூபாய் என மொத்தம் 15 கோடி ரூபாய் தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

மற்றவர்களுக்கு உண்டு

மற்றவர்களுக்கு உண்டு

இப்படி தனக்கு சம்பளத்தை குறைத்துப் போட்டுக் கொள்ளும் Mukesh ambani தன் இயக்குநர் குழுவில் இருக்கும் மற்றவர்களூக்கு நல்ல சம்பளத்தைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார். நிகில் ஆர் மேஸ்வானியும், ஹிதல் ஆர் மேஸ்வானியும், கடந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கு தலா 20.57 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி இருக்கிறார்கள்.கடந்த நான்கு ஆண்டு காலத்தில் இந்த இரண்டு இயக்குநர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளவு உயர்வு விவரங்கள் கொடுத்திருக்கிறோம்

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

இந்த இருவரும்
2017 - 18-ல் தலா 19.90 கோடி ரூபாய்
2016 - 17-ல் தலா 16.58 கோடி ரூபாய்
2015 - 16-ல் தலா 14.42 கோடி ரூபாய்
2014 - 15-ல் தலா 12.03 கோடி ரூபாய்
என சம்பளம் பெற்றார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. ஆக Mukesh ambani தனக்கு சம்பள உயர்வு கொடுத்துக் கொள்ளாத போதும், தன் இயக்குநர் குழுவில் உள்ளவர்களுக்கும், தன் நிறுவனத்தில் திறமையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கும், நல்ல சம்பள உயர்வு கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mukesh ambani doesnt have salary increment for the last 11 years

mukesh ambani does not have salary increment for the last 11 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X