சென்னை, தமிழ்நாடு: இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் Nirmala sitharaman, தன் முதல் பட்ஜெட்டை கடந்த ஜூலை 05, 2019 அன்று தாக்கல் செய்தார்.
அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, பல காலங்களாக சூட் கேஸில் வைத்துக் கொண்டு வரும் பட்ஜெட் தரவுகளை முதல் முறையாக ஒரு துணிப் பையில் கொண்டு வந்தார்.

சென்னையில் நடந்த (International Business Conference of Nagarathar) நகரத்தாரின் சர்வதேச வியாபார மாநாட்டுக்கு பேச வந்திருந்த நிர்மலா சீதாராமன், இந்த சூட் கேஸ் என்கிற ஒரு வார்த்தையை வைத்து, காங்கிரஸ் அரசை மறைமுகமாகவும் பயங்கரமாகவும் தாக்கி இருக்கிறார்.
"நான் 2019 - 20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது சூட் கேஸைக் கொண்டு வரவில்லை. நாங்கள் சூட் கேஸ் தூக்கிக் கொண்டு போகும் அரசு கிடையாது. சூட் கேஸ் வேறு சிலவைகளையும் குறிக்கிறது. சூட் கேஸ் வாங்குவது, சூட்கேஸ் கொடுப்பது என பல விஷயங்களைக் குறிக்கிறது. மத்தியில் ஆட்சிப் பொறுப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இயங்கும் பாரதிய ஜனதா கட்சியின் அரசு ஒரு சூட் கேஸ் அரசாங்கம் கிடையாது" எனப் பேசி இருக்கிறார் மத்தியின் முதல் பெண் நிதி அமைச்சர் Nirmala sitharaman.
இவர் மறைமுகமாக காங்கிரஸ் அரசாங்கம் லஞ்சம் கொடுக்கும் அரசு, கமிஷன் வாங்கும் அரசு, லஞ்சம் வாங்கும் அரசு, லஞ்சத்துக்காக சூட் கேஸை கையில் எடுத்துக் கொண்டே போகும் அரசு எனச் சொல்வதாகத் தான் தெரிகிறது. இதுவரை Nirmala sitharaman-ன் மறைமுகமான சாடலுக்கு எந்த ஒரு காங்கிரஸ் தலைவர்களோ அல்லது தொண்டர்களோ இதுவரை பதில் சொல்லவில்லை என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
ஜூலை 05, 2019 அன்று, 2019 - 20 நிதி ஆண்டுக்கான மத்திய அரசுக்கான பட்ஜெட் தரவுகள் மற்றும் பட்ஜெட் பேச்சுகளை பன் நெடுங்காலமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்து சிவப்பு லெதர் சூட் கேஸில் தான் கொண்டு வருவார்கள். ஆனால் முதல் முறையாக Nirmala sitharaman ஒரு இந்திய அரசு முத்திரை உள்ள சிவப்பு துணிப் பையில், சிவப்பு சேலையுடன் வந்து தேசிய டிரெண்டானார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications