வேலை செய்யாவிட்டாலும் சம்பளமா.. இது நல்லா இருகே.. ஏர் இந்தியா கலக்குறீங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : என்ன ஒரு அலட்சியம் நம்ம அதிகாரிகளுக்கு, இது போன்ற செயல்களினால் தான் ஏர் இந்தியா தொடர் நஷ்டத்தையே கண்டுள்ளதோ. இந்த அளவுக்கு கவனக்குறைவாக இருப்பதால் தானோ என்னவோ ஏர் இந்தியா கடும் பிரச்சனையை சந்தித்துள்ளது என்றும் கருதப்படுகிறது.

 

ஆமாங்க.. பணியிலேயே இல்லாத உயர் அதிகாரி ஒருவருக்கு மாத மாதம் தவறாமல் சம்பளத்தை அள்ளித் கொடுத்துள்ளது ஏர் இந்தியா.

அதிலும் இதுவரை 3 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளாராம். பல கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் கவனக்குறைவை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பணியில் இல்லாதவருக்கும் சம்பளம்

பணியில் இல்லாதவருக்கும் சம்பளம்

இப்படி பல கோடியை தாரை வார்த்துவிட்டு, நிறுவனத்தையே தனியாருக்கு தாரை வார்க்கப்பட உள்ள ஏர் இந்தியாவின் முன்னாள் ஊழியர் தான் அதுல் சந்திரா, கடந்த 2017 வரை ஏர் இந்தியா நிறுவனத்தில் இணை பொது மேலாளராக இருந்தவர். தற்போது சிவில் விமானப் போக்குவரத்து துறை இயக்குனர் அலுவலகத்தில் தலைமை விமான போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியில் இருப்பவர். இவர் சிவில் விமானப் போக்குவரத்து துறையில் பணியில் சேர்ந்த பின்னும், அதாவது, 2017 ஜனவரிக்கு பின்னும் தொடர்ந்து அவர் வங்கி கணக்குக்கு ஏர் இந்தியா நிறுவனம் பல லட்சம் சம்பளத்தை செலுத்தி வந்திருக்கிறது. இது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தான் நிறுத்தப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா ரூ.80லட்சம் கொடுத்துள்ளது?

ஏர் இந்தியா ரூ.80லட்சம் கொடுத்துள்ளது?

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தியதில், அந்த அதிகாரி, ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து இதுவரை 80 லட்சம் ரூபாய் பணம் தன் கணக்கில் வந்துள்ளது, அதை நான் திருப்பி செலுத்தி விடுகிறேன்' என்றும் கூறியுள்ளாராம். ஆனால் உண்மையில், அதுல் சந்திராவுக்கு ஏர் இந்தியா இதுவரை கிட்டதட்ட 3 கோடி ரூபாய் வரை சம்பளத்தை செலுத்தி வந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

உண்மையில் எத்தனை கோடி?
 

உண்மையில் எத்தனை கோடி?

உண்மையில், இது குறித்த விசாரணையில் மேலும் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏர் இந்தியாவில் பணியில் இருந்தபோதே கடந்த 2014 - 17 இடைப்பட்ட காலத்திலும் டெபுடேஷன் அடிப்படையில் சிவில் விமானப் போக்குவரத்து துறையில் பணியாற்றி வந்துள்ளார் அதுல் சந்திரா. அந்த நிலையிலும் கூட அவருக்கு கோடிக் கணக்கில் தவறாமல் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அதுல் சந்திரா தவிர இன்னும் எத்தனை பேருக்கு இப்படி ஏர் இந்தியா நிறுவனம் சம்பளத்தை வாரி வழங்கியுள்ளது என்றும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறதாம். என்ன கொடுமை பாருங்க?

இரண்டு சம்பளம்?

இரண்டு சம்பளம்?

இன்றைய காலகட்டத்தில் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வரும் ஒருவருக்கோ சம்பளம் வருமா வராதா என்ற நிலையில், இங்கு வேறு துறையில் பணிபுரியும் ஒருவருக்கு மற்றொரு துறையின் மூலம் சம்பளம் வந்திருப்பது, அரசு ஊழியர்களின் அலட்சியத்தையும், மெத்தனமான போக்கையுமே காட்டுகிறது என்கிறார்கள் ஆர்வலர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India officer taken salary from AI and DGCA

Air India officer taken salary from AI and DGCA
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X