குருகிராம் : ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள பப் ஒன்றில் பெண்கள் பீர் என்ற அடைமொழியுடன் "பெண்கள் பீர்" என்ற ஒரு பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாம்.
அட நம்ம மக்கள் பூரண மது விலக்கு கொண்டு வரவேண்டும் என்று ஒரு புறம் துடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நம்ம ஹரியான குடிமக்கள் குருகிராம் பகுதியில் உள்ள அர்டார் 29 என்ற பப் ஒன்றில் பெண்கள் பீர் என்ற அடைமொழியுடன் பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாம்.

ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியில் உள்ள அர்டார் 29 என்ற 'பப்' ஒன்றில் 'இந்தியாவின் முதல் பெண்கள் பீர்' என்ற அடைமொழியுடன் பீர் ரகம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
இதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா? பொதுவாக பீரின் சுவை கசப்பு சுவையை இருக்கும். இது பெண்கள் பலரும் விரும்புவதில்லை. இதனால் தான் பீரின் சுவையில், ஒரு மாறுதலைச் செய்து பெண்களுக்கான முதல் பீர் என அறிமுகப்படுத்தியுள்ளோம் என்று அந்த பப் நிர்வாகமும் கூறியுள்ளது.
இது குறித்து பப் நிர்வாகத்தினர் கூறுகையில், முதலில் சம்மர் பீர் என்று தான் இந்த மாற்றுச்சுவையுள்ள பீரை அறிமுகம் செய்தோம். ஆனால், வாடிக்கையாளர்களாலேயே இந்த பீர் "பெண்கள் பீர்" என்ற பெயர் வழக்கத்தில் கொண்டு வரப்பட்டது.
இந்த பீர் மிகவும் இனிப்பானதாக இருப்பதாலே என்னவோ இதை இவ்வாறு அழைக்கின்றனர். பெண்களும் இனிமையானவர்கள் தானே என்று தெரிவித்துள்ளனராம்.
இது இப்படியெனில் மறுபுறம் நம்ம நெட்டிசங்கள் சும்மா இருப்பார்களா? இந்த பீர் குறித்த விவரம் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாகவே, இந்த பீர் குறித்து அறிந்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
இந்த பப் தனது அதிகாரப்பூர்வ பேஸ் புக் தளத்தில், இந்த பெண்கள் பீரை வெளியிட்டது. இது நெட்டிசன்களிடம் இருந்து தாறுமாறான கருத்துகள் வரவே, அந்த பதிவை உடனடியாக நீக்கியுள்ளது இந்த பப்.
எனினும் இந்த பதிவு குறித்த ஸ்கீரின் சாட்களை எடுத்து வைத்திருந்த நம்ம நெட்டிசன்கள், இதற்கு எதிரான இடுகைகளை போட்டு தாக்கி வருகின்றனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications