தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்!

டெல்லி : கடந்த பருவத்தில் மழையின்மையால் தக்காளி விலை அதிகரிப்பு ஏற்பட்டது ஆனால் தற்போது டெல்லியில் சில்லறை சந்தைகளில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. காரணம் நாடு முழுவதும் உள்ள முக்கிய மாநிலங்களில் இடைவிடாத மழை மற்றும் வெள்ளம் போன்ற சூழ்நிலையைத் தொடர்ந்து ஒரு கிலோவுக்கு 60 முதல் 80 ரூபாய் வரை வர்த்தகமாகி வருகிறதாம்.

நகரம் முழுவதும் உள்ள பெரும்பாலான சில்லறைக் கடைகள் மற்றும் காய்கறி சந்தைகளில் தக்காளியின் விலை கிலோவுக்கு 80 ரூபாயாக உயர்ந்துள்ளதாம்.

தக்காளி விலை அதிகரிப்பு..  இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்!

பஹர்கஞ்ச் மண்டியின் காய்கறி விற்பனையாளர்களின் கூற்றுப்படி, வெண்டைக்காய், சுரைக்காய் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதாம்.

இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவெனில், அடுத்த ஒரு மாதத்தில் விலை கட்டுக்குள் வராவிட்டால் அவை மேலும் அதிகரிக்கலாம் என்றும் எச்சரித்துள்ளனராம்.

அதிலும் உணவுகளுக்கு மேலும் சுவையூட்டவும் அழகூட்டவும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி ஒரு கிலோவுக்கு 250 ரூபாய்க்கும் விற்கப்படுகிறதாம்.

அதிலும் இந்த விலைவாசி உயர்வு குறிப்பாக தக்காளி வினியோகத்தை பெரிதும் பாதித்துள்ளதாம். ஆமாங்க.. 3 கிலோ தக்காளி வாங்குபவர்கள் 1 கிலோ மட்டும் தான் வாங்குகிறார்களாம்.

மொத்த சந்தையில் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், சில்லறை கடைகளில் விலை மிக அதிகமாகவே உள்ளதாம்.

மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக தக்காளி விலை உயர்ந்துவிட்டது என்றும் பஹர்கஞ்சில் காய்கறி விற்பனையாளர் ஷியாம் சுந்தர் சிங் கூறியுள்ளார்.

அதோடு டெல்லிக்கு பெரும்பாலும் மத்திய பிரதேசம் மஹாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலிருந்து தக்காளி சப்ளை செய்யப்படுகிறது.

ஆனால் தற்போது அந்த மாநிலங்கள் வெள்ளம் மற்றும் பலத்த மழை காரணமாக தக்காளி பயிர்கள் மோசமாக சேதமடைந்துள்ளனவாம். அதோடு பயிர்கள் மிக மோசமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனவாம். இதனால் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் டெல்லிக்கு தற்போது பெங்களூரிலிருந்து தக்காளி வழக்கப்படுகிறதாம். இந்த நகரம் நல்ல தரமான சுவையான தக்காளியை வழங்கினாலும், தேவை அதிகமாக உள்ள நிலையில், ஆனால் சப்ளை குறைவாகவே உள்ளது, இதனால் விலைகள் திடீரென அதிகரித்துள்ளனவாம்.

இந்த விலையேற்றம் அதிகரிக்க இன்னும் இரண்டு மாதங்கள் ஆகுமாம். ஏனெனில் தக்காளி வினியோகத்தை சிம்லா இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கும். ஆனால் அதுவறை விலை இப்படி தான் அதிகரித்து காணப்படுமாம் என்றும் கூறப்படுகிறது.

இதே வாடிக்கையாளர் தரப்பில், உணவில் சுவையை அதிகரிக்க தக்காளி அவசியம் என்பதால் இது நிச்சயம் பாக்கெட்டில் ஒரு திணறை ஏற்படுத்தும். ஆண்டில் ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் விலைகள் இப்படித்தான் அதிகரிக்கின்றன. அதிலும் நடுத்தர வர்க்க மக்கள் தான் இந்த விலையேற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அரச்சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+