நாம கொஞ்சம் ஓவரா போய்ட்டோமோ... ரூ.9 லட்சம் விலையுள்ள கேமராவை 6500 ரூபாய்க்கு விற்ற அமேசான்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு நடத்திய பிரைம் டே சிறப்பு சலுகை விற்பனையில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள கேமராவை 6500 ரூபாய்க்கு தவறுதலாக விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வழக்கமாக பிரைம் டே சிறப்பு சலுகையில் 30 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை மளிகைப் பொருட்கள், டிவி, கேமரா, ஏசி, வாஷி மெஷின் என வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

என்றைக்கு நவீனமயம் என்ற பெயரில் தொழில்நுட்பம் நம்மை சோம்பேறியாக்கி விட்டதோ அன்றைக்கே நம்முடைய சந்தோசம் காணாமல் போய்விட்டது என்று சொல்லலாம். அதிலும் ஸ்மார்ட்ஃபோன் என்ற அரக்கன் நம்முடைய கைகளில் தஞ்சம் புகுந்ததோ அன்றைக்கே நாம் சந்தோசம், ஆத்ம திருப்தி என அனைத்தையும் இழந்து விட்டோம் என்பதுதான் நிஜம்.

போட்டி

போட்டி

போட்டிகள் நிறைந்த இன்றைய வியாபார உலகில் தங்கள் நிறுவன பொருட்கள் மக்களுக்கு அதிக அளவில் சென்றடைய வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையில் லாபத்தை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து பொருட்களை விற்பனை செய்து மக்களை கவர்ந்து வருகின்றன. அதிலும், இன்றைக்கு ஆன்லைன் விற்பனை என்ற தொழில்நுட்பம் வந்துவிட்டதால் பெரும்பாலான நிறுவனங்கள் ஃபிளிப்கார்ட், அமேசான், இ-பே போன்ற ஆன்லைன் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தங்கள் பொருட்களை விற்பனை செய்வதை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றன.

ஆன்லைன்

ஆன்லைன்

ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் ஆன்லைன் விற்பனையில் யார் முதலிடம் பிடிப்பது என்ற போட்டி மனப்பான்மையில் விலை, தரம், லாபம் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் வந்ததை வரவில் வைப்போம் என்ற பெயரில், பொருட்களை விற்பனை செய்துவருகின்றன. அதிலும் குறிப்பாக திருவிழா சலுகை விடுமுறை நாள் சலுகை பிரைம் டே சலுகை என சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்து வாடிக்கையாளர்களை கவர்வதில் போட்டி போட்டு வருகின்றன.

முன்னணி
 

முன்னணி

அதிலும், முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான், இதில் கொஞ்சம் ஓவராக விற்பனை செய்வது போல் தெரிகிறது. கடந்த வாரத்தில் சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை 6500 ரூபாய்க்கு விற்பனை செய்து சமூக வலைதளங்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பிரைம் டே சலுகை என்ற பெயரில் பொருட்களை விற்பனை செய்துவருவது அனைவரும் அறிந்ததே. அதிலும் அமெசான் பிரைம் குழுவில் இணைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 60 சதவிகிதம் வரை சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்வது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் கடந்த ஜூலை 15 மற்றும் 16ஆம் தேதிகளில் பிரைம் டே சலுகையில் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் டிவி, கேமரா, ஃபிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் வரை மின்னணு சாதனங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டன.

6500 ரூபாய்

6500 ரூபாய்

இதில் தவறுதலாக சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்புடைய உயர் ரக கேமராக்கள் சில வெறும் 6500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இது வேண்டுமென்றே விற்பனை செய்திருக்க முடியாது. குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்க வேண்டும் என்ற அவசரத்தில் தவறுதலாக விற்பனை செய்திருக்கக்கூடும் என்று அந்த கேமராக்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் சிலர் தெரிவித்தனர். நம்ம ஆட்கள் தான் சலுகை விலையில் விற்பனை செய்தால் சயனைடு விஷத்தை கூட போட்டி போட்டு வாங்குபவர்கள் ஆயிற்றே. விடுவார்களா என்ன, வந்த வரை லாபம் என்று சொல்லி, சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராக்கள் 6500 ரூபாய்க்கு வாங்கிய வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்து வாங்கிக் கொடுத்தனர். இதனால் குறைந்த அளவிலேயே இருந்து கேமராக்கள் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்தன. ஆனால், இது பற்றி அமேசான் நிறுவனம் எந்தவிதமான உறுதியான தகவலோ விளக்கமோ அளிக்கவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon Sold Rs.9 lakh worth camera for Rs.6500 by mistake

This year Amazon had the Prime Day on July, 15 and 16, worldwide. However, the best deal by Amazon this year was probably a glitch. Some lucky photography enthusiasts were able to guy high-end camera gear that originally retails at approximately Rs 9 lakh for just Rs 6,500.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X