டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் சந்திரயான் 2 தற்போது வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் இன்னும் 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின் தென் பகுதியை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் யாரும் இதுவரை நினைத்து கூட பார்க்காத நிலவின் தென் துருவத்தை இந்தியா இன்னும் சில நாட்களில் தொட போகிறது. சந்திரயான் 1 வெற்றியை தொடர்ந்து, பத்து வருடங்களுக்கும் மேல் ஆகியும், தற்போது சந்திரயான் 2 வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆமாங்க.. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை சந்திரனில் ஆய்வு செய்ய அனுப்பியது. இந்த நிலையில் அந்த திட்டம் வெற்றி பெற்றதையடுத்து சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது.
அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.
ஆனால் அன்று கடைசி நேரத்தில் பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்ட போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சந்திரயான்-2 ஏவப்படுவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் சந்திரயான்-2 இதற்கான மொத்த செலவு 978 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. ஆமாங்க.. இந்த பணிக்காக 603 கோடி ரூபாயும், இதே இதை ஏவப்படுவதற்கு 375 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாம். டாலரில் 142 மில்லியன் டாலர்கள் எனவும் கூறப்படுகிறது.
இது ஒரு புறம் எனில், மறுபுறம் ஹாலிவுட் படங்களுக்கு அதிக செலவிடப்படும் நிலையில், சந்திராயன் 2க்கு 4ல் ஒரு பங்கு தான் செலவு என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக அவெஞ்சர்ஸ் : எண்ட்கேம் 356 மில்லியன் டாலர், இந்திய ரூபாயில் 2,443 கோடி ரூபாய் செலவிடப்பட்டு படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு அவெஞ்சர்ஸ் திரப்படங்களும் நான்கு மடங்கு, மிஷனை விட அதிகம் செலவாகின்றது என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக அவெஞ்சர்ஸ் படத்திற்கு 220 மில்லியன் டாலரும், அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் காஸ்ட் 316 மில்லியன் டாலரும், அவெஞ்சர்ஸ் : ஏஜ் ஆப் மில்லியன் அல்ட்ரான் 365 மில்லியன் பட்ஜெட் செலவிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
ஆனால் நம் ஆய்வாளர்களோ இதில் நான்கில் ஒரு பங்கிலேயே சந்திராயன்-2 வை தயாரித்து, விண்ணிற்கு அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, இது எவ்வளவு பெரிய சாதனை என்றும் பெருமையாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதியம் 2.45 மணியளவில் சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications