ஜெனிவா : சவுதி அரேபியாவால் மூன்று மாதங்களுக்கு முன் சிறை பிடித்த ஈரானின் எண்ணெய் கப்பலை சவுதி அரேபியா தற்போது விடுவித்துள்ளது.
சூயஸ் கால்வாய் நோக்கி 6 ஊழியர்களுடன் புறப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பலான "ஹேப்பினஸ் 1" கடந்த ஏப்ரல் 30ம் தேதி, செங்கடல் பகுதியை கடந்த போது இன்ஜினுக்குள் கடல்நீர் புகுந்ததில், இன்ஜின் பழுதாகி கட்டுப்பாட்டை இழந்து நின்றது.

இந்த நிலையில், இந்த கப்பல் சவுதி அரேபியா கடலோர காவல்படையினரால் கடந்த மே மாதம் சிறை பிடிக்கப்பட்டது.
மேலும் இதன் பராமரிப்பு செலவாக ஈரான் நாளொன்றுக்கு ரூ.1.38 கோடி அளிக்க சவுதி அரேபியா கூறியது. இந்த நிலையில், ஏறக்குறைய சிறைபிடிக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது ஈரான் எண்ணெய் கப்பலை சவுதி அரேபியா விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஈரான் போக்குவரத்துத் துறை அமைச்சர் முகமது இஸ்லாமி கூறுகையில், சவுதியுடனான பேச்சுக்கு பின்னர் எண்ணெய் கப்பல் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது அது பெர்சியன் வளைகுடாவை கடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஒரு புறம் ஈரானின் கப்பலை விடுவித்தாலும் மறுபுறம் ஈரான் இங்கிலாந்து கப்பலை கைப்பற்றியிருப்பது குறித்து, ஈரான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
அதோடு ஈரான் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இந்த மாதிரியான சுதந்திரத்திற்கு எதிரான எந்தவொரு தாக்குதலும், சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்றும் சவிதி அரேபியாவின் வெளியுறவு துறை மந்திரி கூறியுள்ளார்.
இதே போல ஓமனும் இங்கிலாந்து நாட்டு கப்பலை விடுவிப்பதையே எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.
இந்த நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தியில் தங்களது எண்ணெய் படகுகளை பாதுகாப்பதற்காக, பல நாடுகள் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக அளவில் பயன்படுத்தப்படும் எண்ணெய்யில் மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் கடல் வழியாக கொண்டு செல்லப்படுகிறது என்றும் நினைகூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா கடைசியாக ஈரானின் டிரோனை சுட்டு வீழ்த்தியது குறித்தும், ஈரான் அமெரிக்கா டிரோனை சுட்டு வீழ்த்தியது குறித்தும் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய பிரச்சனையால் தொடர்ந்து ஹார்மூஜ் ஜலசந்தியில் தொடர்ந்து பதற்றமே நிலவி வருவதுடன், அமெரிக்கா இங்கிலாந்துடன் சேர்ந்து, தற்போது பல நாடுகள் ஈரானுக்கு எதிராக திசை திரும்பியுள்ளன.
More From GoodReturns

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஈரான் போரால் இந்தியாவில் புது பிரச்சனை.. மருத்துவமனைகளில் ஷாக்.. என்ன நடக்குது?!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

மோடியின் திடீர் அவசர CCS கூட்டம்.. எதற்காக ஞாயிற்றுக்கிழமை மீட்டிங்..? என்ன நடந்தது..?!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

LPG வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?



Click it and Unblock the Notifications