Reliance jio : எங்களுக்கு வணிக நோக்கம் இல்லை.. சந்தாதாரர்களின் எண்ணிக்கை தான் முக்கியம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது தொலைத்தொடர்பு வணிகமான ஜியோவில் வணிக நோக்கத்தைத் விட சந்தாதாரர்களை சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறதாம்.

 

ஆமாங்க.. ஜியோவுக்கு வணிக நோக்கம் தற்போதைக்கு கிடையாதாம். வணிகத்தை விட தங்களுக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை தான் முக்கியம் என்றும் இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறுகின்றனராம்.

இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி என்று ஜியோவை அறிமுகப்படுத்தினாரோ அதிலிருந்தே, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவையே சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் ஜியோ இவ்வாறு கூறியிருப்பது தற்போதைக்கு டாரிப்களில் எந்த மாற்றமும் இல்லை என்பதேயே குறிக்கிறது.

Mutual funds: ஐந்து ஆண்டுகளில் 15% வருமானம் கொடுத்த மிட் கேப் ஃபண்டுகள்! Mutual funds: ஐந்து ஆண்டுகளில் 15% வருமானம் கொடுத்த மிட் கேப் ஃபண்டுகள்!

எங்களுக்கு இலாபம் முக்கியம் அல்ல? வாடிக்கையாளர் தான் முக்கியம்?

எங்களுக்கு இலாபம் முக்கியம் அல்ல? வாடிக்கையாளர் தான் முக்கியம்?

நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறோம். எங்களுக்கு இலாபம் முக்கியம் அல்ல, வாடிக்கையாளர்கள் தான் என்கிறார் ஜியோவின் மூலோபாயாத் தலைவர் அனுஷ்மன் தாக்கூர். ஆக வாடிக்கையாளருக்கு என்ன தேவையோ அதை தான் ஜியோ கொடுத்து வருகிறது இதனால் நாளுக்கு நாள் ஜியோவின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் கூறியுள்ளார் தாக்கூர்.

ஜியோ ஆரம்பித்ததிலிருந்தே பல சலுகைகள்

ஜியோ ஆரம்பித்ததிலிருந்தே பல சலுகைகள்

கடந்த செப்டம்பர் 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தற்போது வரை ஜியோ 331.3 மில்லியன் சந்தாதாரர்களை இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக மிகக் குறைவான விலையில் டேட்டா பேக்குகள், இலவச வாய்ஸ் கால்கள், இலவச இசை மற்றும் திரைப்படங்கள் என பல சலுகைகளை கொடுத்து வருகிறது. இதனால் சந்தாதாரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது மொபைல் சந்தையில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் சிறிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வர்த்தகத்தை விட்டே வெளியே போயின. எனினும் வோடபோன் நிறுவனத்துடன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து செயலாற்றுகின்றன.

ஜியோவின் வருகையால் மற்ற நிறுவனங்களுக்கு நஷ்டமே
 

ஜியோவின் வருகையால் மற்ற நிறுவனங்களுக்கு நஷ்டமே

ஜியோவின் வருகைக்கு பிறகு, மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இலாபம் என்பது வெகுவாக குறைந்துவிட்டது. குறிப்பாக ஜியோ கடந்த ஜூன் 30 வரையிலான மூன்று மாத காலத்தில், சராசரியாக ஒரு பயனரின் மூலம் கிடைக்கும் சாராசரி வருமானம் ரூ.122 ஆக குறைந்துள்ளதாம். இது கடந்த ஆண்டை விட 9.3 சதவிகிதம் குறைவு என்றும் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. எனினும் ARPU gameமில் நாங்கள் இல்லை, நாங்கள் நீண்ட கால நோக்கில் செயல்படுவதையே விரும்புகிறோம் என்றும் தாக்கூர் கூறியுள்ளாராம்.

ஜியோதான் முதலிடம்

ஜியோதான் முதலிடம்

சமீபத்தில் பார்தி ஏர்டெல்லை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டு, ஜியோ முதலிடத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது. இதன் பின்னரே வோடபோன் அடுத்த இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜியோ சந்தாதாரகளை இணைத்தவுடன் டாரிப்களின் விலை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால் எவ்வாறாயினும் நாங்கள் இந்த காலாண்டில் 24.5 மில்லியன் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளதாகவும், அதன் சந்தாதாரர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 11.4 ஜிகாபைட் தரவைப் பயன்படுத்துகிறார்கள் என்றும், ஜியோ தற்போதைக்கு எந்த வித கட்டண மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளது.

ஜியோவின் கோபுர சொத்துக்கள் விற்பனை?

ஜியோவின் கோபுர சொத்துக்கள் விற்பனை?

இந்த செயல்திறன் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் தாக்கூர் கூறியுள்ளார். இந்த நிலையில் ஜியோ தனது கோபுர சொத்துக்களை தனது முதலீட்டு அறக்கட்டளை மூலம், கனடாவின் புரூக்ஃபீல்ட் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு 250 பில்லியன் ரூபாய்க்கும் விற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio to focus on subscribers not tariffs

Reliance Jio to focus on subscribers not tariffs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X