State Bank of India. இந்தியாவின் மிகப் பெரிய வங்கி. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக கடந்த 2018-ம் ஆண்டு 216-வது இடம் பிடித்தது. இந்தியாவில் வங்கிச் சேவைகளில், 23 சதவிகித சந்தையை ஒற்றை நிறுவனமாக தன் கையில் வைத்திருக்கிறது State Bank of India.
இன்று (ஜூலை 22, 2019) காலை முதல் State Bank of India வங்கியின் இணைய பேங்கிங் வசதிகள், yono செயலி (அப்ளிகேஷன்) என எதிலும் பணப் பரிமாற்றம் செய்ய முடியவில்லை எனச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதுவரை State Bank of India வங்கி சார்பாக, வங்கி மேல் அதிகாரிகளோ அல்லது State Bank of India வங்கியின் தலைமையகத்தில் இருந்தோ எந்த ஒரு விவரமும் வெளியாகவில்லை. அதற்கு மாறாக SBI வங்கியில் இணைய பணப் பரிமாற்றங்கள் முறையாக செய்ய முடியவில்லை என்பதை மட்டும் பல்வேறு SBI வங்கி வாடிக்கையாளர் தங்கள் ட்விட்டர் கணக்கு வழியாக பதிவிட்டு வருகிறார்கள்.
State Bank of India வங்கியின் இணைய வங்கிப் பக்கத்துக்குச் சென்றால் லோட் ஆகவில்லையாம். அதே போல State Bank of India வங்கி, தன் புதிய தலைமுறை வாடிக்கையாளர்களின், ஸ்மார்ட்ஃபோன் தளத்துக்காக உருவாக்கப்பட்ட State Bank of India யோனோ அப்ளிகேஷனில் தொடர்ந்து முயற்சி செய்தால் கூட தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கூடப் பார்க்க முடியவில்லை என புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.
இன்று காலையில் இருந்தே State Bank of India வங்கியின் இணைய வங்கி வசதிகள் சரியாக இல்லை. யாராவது இந்த பிரச்னையை சரி செய்து கொண்டிருக்கிறார்களா..? எப்போது இந்த இணைய வங்கிச் சிக்கல் தீரும்..? என ஒரு State Bank of India வாடிக்கையாளர் கொந்தளித்திருக்கிறார்.
ரிதிக் சுரானா என்பவர் "ஏன் State Bank of India இணைய வங்கிச் சேவைகள் எப்போதும் திங்கட்கிழமை வேலை செய்வதில்லை..?" எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதோடு "நாங்கள் அதிகம் நம்பி இருப்பது இந்த இணைய வங்கிச் சேவைகளைத் தான், இப்போது அதுவும் வேலை செய்யவில்லை. State Bank of India இணைய வங்கிகள், யோனோ செயலி, கூகுள் பே வழியாகக் கூட பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியவில்லை" என தன் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications