மத்திய கிழக்கு நாடுகள் எனப்படும் அரபு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபுக் குடியரசின் வடக்கு பகுதிகளில், சிமென்ட் உற்பத்திக்கு தேவைப்படும் எரிபொருளாக, பாலைவனக் கப்பல் எனப்படும் ஒட்டகத்தின் சாணத்தை பயன்படுத
ராஸ் அல்-கைமா: மத்திய கிழக்கு நாடுகள் எனப்படும் அரபு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபுக் குடியரசின் வடக்கு பகுதிகளில், சிமென்ட் உற்பத்திக்கு தேவைப்படும் எரிபொருளாக, பாலைவனக் கப்பல் எனப்படும் ஒட்டகத்தின் சாணத்தை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
சுற்றுச்சூழ பாதுகாக்கும் வகையிலும், கால்நடைகளின் கழிவுகளை வீணாகாமல் பயன்படுத்தும் நோக்கிலும் ஒட்டகத்தின் சாணத்தை பயன்படுத்தவதாக சிமெண்ட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 8 கிலோ வரை ஒரு ஒட்டகம் கழிவுப் பொருளை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிமெண்ட் உற்பத்திக்கு ஒட்டகச் சாணம் பயன்படுத்தப்படுவது குறித்து தெளிவாக விளக்கிய கல்ஃப் சிமெண்ட் கம்பெனியின் (Gulf Cement Company) பொது மேலாளர் மொஹமத் அஹ்மத் அலி இப்ராஹிம் (Mohamed Ahmed Ali Ebrahim), முதலில் இந்த திட்டத்தை சொன்னவுடன் பொதுமக்கள் யாருமே நம்பவில்லை. சிலர் கிண்டலடித்தனர். இருந்தாலும் எமிரேட்ஸ் அரசின் கழிவு மேலாண்மை அமைப்பு இத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்தது, என்று குறிப்பிட்டார்.
மாட்டுச்சாணம், கோமியம்
நாம் அனாவசியமாக வீணாக்கும் பொருட்கள், கழிவுகள் எல்லாம் குப்பை கிடையாது. அவற்றை முறையாக பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் அதிலிருந்து கிடைக்கும் பயன்களும் அதிகம். நம் முன்னோர்களும் இதையே நமக்கு வலியுறுத்திவிட்டு சென்றார்கள். குறிப்பாக மாட்டுச் சாணத்தை கரைத்து வாசலில் தெளிக்கவும், சாணத்தை வெயிலில் காயவைத்து அதையே எரிபொருளாகவும், மாடுகளின் சிறுநீரை (கோமியம்) வீடுகளில் தெளித்தும் முறையாக பயன்படுத்துவதற்கு நமக்கு கற்றுத் தந்தவிட்டு சென்றனர்.
இதுதான் இயற்கை உரம்
இந்த நடைமுறை தமிழக கிராமங்களில் இன்றும் பழக்கத்தில் உள்ளது. அதேபோல் மாட்டுச் சாணத்தையே விளைநிலங்களுக்கு இயற்கை உரமாகவும் பயன்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இதன் நற்குணங்களை நன்கு அறிந்து கொண்ட மேலை நாடுகளும் சாணத்தையும் மாட்டின் சிறுநீரையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து இயற்கை மருந்தாகவும், உரமாகவும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மாத்தி யோசி
நாம் மாட்டுச் சாணத்தை எப்படி வாசல் தெளிப்பதற்கும், எரிபொருளாகவும் பயன்படுத்துகிறோமோ, அதையே ஐக்கிய அரபு குடியரசில் (United Arabic Emirates) சற்று மாற்றி யோசித்து பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அங்குதான் மாடுகள் கிடையாதே. அதற்கு பதிலாக ஒட்டகத்தின் சாணத்தையே எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள். சிமெண்ட் உற்பத்திக்கான எரிபொருளாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒட்டகப் பால்
மத்திய கிழக்கு நாடுகளான அரபு நாடுகளில் பாலைவனக் கப்பல் எனப்படும் ஒட்டகமே பெரும்பாலும் கால்நடைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாலைவனப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் சுமார் 9000 ஒட்டகங்கள் வீட்டு உபயோகத்திற்கும் பால் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒட்டகப் பாலில் இருந்து அழகு சாதனப் பொருட்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒட்டகத்தின் சாணம் எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சிமெண்ட் உற்பத்திக்கு அதிக அளவில் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒட்டகச் சாணம்
பொதுவாக சிமெண்ட் உற்பத்திக்கு அனைத்து நாடுகளிலும் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது திடப்பொருளான நிலக்கரிதான். ஆனால் ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் வடக்கு பகுதியில் சிமெண்ட் உற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரியை பயன்படுத்தினாலும் அவற்றை குறைத்துக்கொண்டு, ஒட்டக சாணத்தையும் கூடவே எரிபொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் கணிசமாக குறையும் என்பதை அறிந்தே இதை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒரு நாளைக்கு 8 கிலோ
பொதுவாக ஒட்டகம் ஒரு நாளைக்கு சுமார் 8 கிலோ வரையில் சாணத்தை கழிவாக வெளியேற்றும். ஒட்டக சாணத்தை விவசாயிகள் உரமாக பயன்படுத்தி வருகிறார்கள். இருந்தாலும் அதிக அளவில் சாணத்தை வெளியேற்றுவதால் அவை அதிக அளவில் குவிந்துவிடும். எனவே அவற்றை முழுமையாக பயன்படுத்த நினைத்த அரசு, சிமெண்ட் உற்பத்தி ஆலைகள் பயன்படுத்த அனுமதிக்கின்றன,
மாற்று எரிபொருளாக ஒட்டகச் சாணம்
நம் நாட்டிலும் மாட்டுச் சாணத்தை எரிபொருளாக காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், அமெரிக்கா, சீனா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் மாற்று எரிபொருளாக மாட்டுச் சாணத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இப்பொழுது ஐக்கிய அரபு குடியரசு நாடுகளும் அதே உத்தியை பயன்படுத்தி மாட்டுச் சாணத்திற்கு பதிலாக ஒட்டக சாணத்தை எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றன.
நிலக்கரிக்கு பதிலாக ஒட்டகச் சாணம்
ராஸ் அல்-கைமா எமிரேட்ஸ் அரசால் நடத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ், இதற்கென இருக்கும் சேமிப்பு நிலையங்களில் ஒட்டக சாணம் அனைத்தும் சேகரிக்கப்படும். பின்பு அங்கிருந்து ஒட்டகச் சாணம் தேவைப்படும் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் பின்னர் சிமெண்ட் உற்பத்திக்கான கொதிகலன்களில் நிலக்கரியோடு ஒட்டகச் சாணமும் ஒன்றாக கலக்கப்பட்டு எரிசக்தியாக பயன்படுத்தப்படும்.
யாரும் நம்பவில்லை
சிமெண்ட் உற்பத்திக்கு ஒட்டகச் சாணம் பயன்படுத்தப்படுவது குறித்து தெளிவாக விளக்கிய கல்ஃப் சிமெண்ட் கம்பெனியின் (Gulf Cement Company) பொது மேலாளர் மொஹமத் அஹ்மத் அலி இப்ராஹிம் (Mohamed Ahmed Ali Ebrahim), முதலில் இந்த திட்டத்தை சொன்னவுடன் பொதுமக்கள் யாருமே நம்பவில்லை. சிலர் கிண்டலடித்தனர். இருந்தாலும் எமிரேட்ஸ் அரசின் கழிவு மேலாண்மை அமைப்பு இத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்தது, என்று குறிப்பிட்டார்.
பரிசோதனை முயற்சி வெற்றி
என்னுடைய முன்னோர்கள் மாட்டுச் சாணத்தை எரிபோருளாக பயன்படுத்தியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒட்டகச் சாணத்தை எரிபொருளாக பயன்படுத்தப்படுவதை இப்போது தான் பார்க்கிறேன். முதலில் பரிசோதனை முயற்சியாகவே இத்திட்டத்தை செய்து பார்த்தோம். பரிசோதனை முடிவில், ஒரு டன் நிலக்கரிக்கு மாற்றாக இரண்டு டன் ஒட்டகச் சாணம் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்தோம் என்றம் இப்ராஹிம் கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
முதலில் ஒட்டகச் சாணம் மலை போல் சேர்ந்து வருவதை தடுக்க நினைத்தோம். அதற்காகவே இந்த எரிபொருள் திட்டத்தை செயல்படுத்த முனைந்தோம். இதனால் சாணம் குப்பை போல் குவிந்து சுற்றுச்சூழல் கெடுவதும் தடுக்கப்படும். இடமும் காலியாகிவிடும். வரும் 2021ஆம் ஆண்டுக்குள் 75 சதவிகித சாணக் கழிவுகளை வெளியேற்றிவிட அரசு திட்டமிட்டுள்ளது என்றம் இப்ராஹிம் கூறினார்.
ஒட்டகம் சுத்தமா இருக்கணும்
ஒட்டகச் சாணத்தை எரிபொருளாக பயன்படுத்துவது குறித்து, பண்ணை உரிமையாளரான அஹ்மத் அல்-காத்ரி (Ahmed al-Khatri) என்பவர், அதெல்லாம் எங்களுக்கு தெரியாது சார். எங்களைப் பொருத்த வரை, எங்கள் பண்ணையின் சுற்றுப்புறமும், ஒட்டகங்களும் ரொம்ப சுத்தமா இருக்கணும். அதுதான் முக்கியம் என்றார் தன்னுடைய ஒட்டகங்களையும் அதன் குட்டிகளையும் குளிப்பாட்டிக் கொண்டே.
ஆக மொத்ததில், இங்கு எதுவே கழிவு கிடையாது. ஒரு இடத்தில் அது கழிவாக இருந்தால், அது மற்றோர் இடத்தில் உரமாகவும் எரிசக்தியாகவும் பயன்படுகிறது என்பது தான் நிதர்சனம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications