டெல்லி : மோடி தலைமையிலான பாஜக அரசு முதல் முறை பதவியேற்ற பின்னர், கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் "சர்வதேச யோகா தினம்" கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஐந்தாண்டுகளில் யோகா தினத்தைக் கொண்டாட ஆயுஷ் அமைச்சகம் ரூ.140 கோடியை செலவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை, சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, ராஞ்சியில் பிரதமர் தலைமையிலான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதற்காக 30,000 அதிகமாக இதில் கலந்து கொண்டனர்.
நடப்பாண்டில் யோகா தினத்திற்கு ரூ.40 கோடி செலவு!
இந்த நிலையில் இந்த யோகா தின நாளை கொண்டாட 40 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆமாங்க.. ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தில் சுமார் 40 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இரு மடங்கு அதிகம் என்றும், கடந்த ஆண்டு இது 20 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளது.
மற்ற செலவுகள்!
மேலும் கடந்த 2015 - 2017ம் ஆண்டில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய 73 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் யோகா விளம்பரம் தவிர, இந்த விழாவில் பங்கேற்க வரும் அனைவருக்கும் கலோரி நிறைந்த சிற்றுண்டி மற்றும் இனிப்புகள், குடிநீர் வழங்கல், நினைவுச் சின்னங்கள், எழுதுபொருட்கள், கூடாரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் அமைத்தல் போக்குவரத்தை அமர்த்துவது, விருந்தினர்களுக்கு உறைவிடம் மற்றும் போர்டிங் வசதி என அனைத்தும் வழங்குவது என அனைத்தும் இந்த செலவில் தான் சேர்க்கப்படுகிறதாம்.
விளம்பரத்திற்காக ரூ.64 கோடி
அதோடு ஆயுஷ் அமைச்சின் செலவினத்தின் ஒரு பகுதி, யோகா தின நிகழ்வை தூர்தர்ஷன் மற்றும் தனியார் சேனல்களில், ரேடியோ ஜிங்கிள்ஸ், முக்கிய ஆங்கிலம், பிரந்திய மொழி செய்தித்தாள்களில் அச்சு விளம்பரம் கொடுத்தற்காகவும் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வகையில் கடந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்திற்காக விளம்பர கூறுக்காக ஆயுஷ் அமைச்சகம் 64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வி மற்றும் தொடர்பு கூறுகளுக்காக ரூ.52.60 கோடி!
இந்த நிலையில் 2019 - 2020 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் தொடர்பு கூறுகளுக்காக அரசு 52.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதோடு யோகா தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் தூதரகங்களின் வரவு செலவுத் திட்டங்களை ஆதரிப்பதற்காக "சர்வதேச ஒத்துழைப்புக்காக" மற்றொரு 16 கோடி ரூபாயும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications