டெல்லி : நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகரலாபம் 15 சதவிகிதம் அதிகரித்து 1,755 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதிலும் மூலதன பொருட்களின் விலை வீழ்ச்சியால், இதன் வருவாயும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பொருட்கள் விற்பனை மற்றும் உள்நாட்டு விற்பனை வணிகத்தின் மொத்த வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் 7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே சமயம் நிகரலாபம் 14.9 சதவிகிதம் அதிகரித்து, 1,755 கோடி ரூபாயாகவும், இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 1,528 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
இதே வருவாய் 6.7 சதவிகிதம் அதிகரித்து, 9,984 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நுகரப்படும் பொருட்களின் விலை 6.5 சதவிகிதம் குறைந்து, 3,161, கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
அதோடு ஆப்ரேட்டிங் மார்ஜின் தொகையின் அடிப்படை புள்ளிகள் 250 புள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வரி வட்டி தேய்மானம் இவற்றிற்கு முந்தைய லாபம் 18 சதவிகிதம் அதிகரித்து, 2,647 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹோம் கேர் பொருட்கள் விற்பனை 10 சதவிகிதம் அதிகரித்து 3,464 கோடி ரூபாயாகவும், இதுவே பர்சனல் கேர் மற்றும் அழகு சார்ந்த பொருட்கள் விற்பனை 4.18 சதவிகிதம் அதிகரித்து, 4,624 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதோடு உணவு மற்றும் புத்துணர்ச்சி சார்ந்த பொருட்கள் விற்பனையும் குறிப்பிட்ட அளவு அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.
அதோடு கடந்த ஜூன் காலாண்டில் நிறுவனம் சார்ந்த விளம்பரம் மற்றும் புரோமோஷன்கள், கடந்த ஆண்டை காட்டிலும் 0.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே இந்த நிறுவனத்தின் ஒரு பங்கிற்கான அடிப்படை வருவாய் (இ.பி.எஸ்) நடப்பு நிதியாண்டில் 8.28 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 7.27 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கின் விலை கிட்டதட்ட 1 சதவிகிதம், 14 ரூபாய் அதிகரித்து 1,693 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications