Job: வேலைவாய்ப்புகள் குறையலாம்! பதற வைக்கும் டீம் லீஸ் அறிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வேலைகளை உருவாக்குவதே மிகக் கடினமான வேலையாக இருக்கிறது. இப்போது வேலைவாய்ப்புகளை (Job) உருவாக்குவது இன்னும் சிரமமாகப் போவதை முன் கூட்டி எச்சரிக்கிறது டீம் லீஸ் என்கிற மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் இரண்டு அறிக்கைகள்.

The Jobs and Salaries Primer 2019, மற்றும் Employment Outlook Report - HY1 2019-20 என இரண்டு அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து சில அதிர்ச்சிகரத் தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

Job: வேலைவாய்ப்புகள் குறையலாம்! பதற வைக்கும் டீம் லீஸ் அறிக்கை!

 

டீம் லீஸ் நிறுவனத்தின் இந்த இரண்டு அறிக்கைகளும், அடுத்த சில மாதங்களில், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் (Job) குறையும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

இ காமர்ஸ், வங்கித் துறை, நிதித் துறை, இன்ஷூரன்ஸ் துறை, ஐடி சார்ந்த பிபிஓ வேலை வாய்ப்புகள் (Job) அடுத்த சில மாதங்களில் நான்கு ஆண்டுகளில் 37 சதவிகிதம் வரை வேலைவாய்ப்புகள் (Job) குறையலாம் என எச்சரித்திருக்கிறார்கள். புரிய வில்லையா. 2018 - 2022 ஆண்டுகளில் உருவான அல்லது உருவாக்கப்பட இருக்கும் வேலைவாய்ப்புகளை விட 2019 - 2023 ஆண்டுகளில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறைவாகத் தான் உருவாகும் என்கிறார்கள்.

சந்தைப்படுத்துதல், விளம்பரம் விவசாயம் மற்றும் விவசாய ரசாயனங்கள், டெலிகாம், ஐடி, மீடியா, பார்மா, எண்டர்டெயின்மெண்ட், ஹெல்த் கேர் என பல துறைகளில் ஏற்கனவே புதிய வேலைவாய்ப்புகள் (Job) குறைந்து வருவதையும் சொல்லி இருக்கிறார்கள்.

ஆட்டோமேஷனால் மற்றும் ஆர்டிஃபீசியல் இண்டலிஜென்ஸ் (Artificial Intelligence), ரோபாட் பயன்பாடு போன்ற இயந்திரமயப் பிரச்னைகளை அரசாங்கமும், நிறுவனங்களும் அலசி ஆராய்ந்து சரியான முடிவுகளை எடுக்கும் வரை புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது குறைந்து கொண்டே தான் இருக்கும் என டீம் லீஸ் நிறுவனத்தின் செயல்பாட்டுத் துணைத் தலைவர் ரிதுபர்னா சக்ரபர்த்தி (Rituparna Chakraborty) சொல்லி இருக்கிறார்.

டீல் லீஸ் சர்வேக்கு பதிலளித்த நிறுவனங்களில், 95 சதவிகிதம் பேர், தங்கள் நிறுவனங்களுக்கு, இந்த ஏப்ரல் - செப்டம்பர் 2019 காலத்திலேயே, அதிக நபர்களை வேலைக்கு எடுக்க விரும்புவதாகவும் சொல்லி இருக்கிறார்களாம். அது தான் இந்த அறிக்கையில் கொஞ்சம் நிம்மதி கொடுக்கக் கூடிய விஷயம்.

இந்தியாவிலேயே 2018 - 2022 காலத்தை விட 2019 - 2023 காலத்தில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய துறையாக FMCD - Fast Moving Consumer Durable இருக்கிறது. கடந்த (2018 - 2022) 4 ஆண்டு காலத்தை விட தற்போதைய (2019 - 2023) 4 ஆண்டு காலத்தில் சுமார் 65% கூடுதலாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போகிறதாம்.

அதே போல 2018 - 2022 ஆண்டுகளை விட 2019 - 2023-ல் மிகக் குறைவான வேலைவாய்ப்புகளை உருவாக்கிய துறையாக விவசாயம் மற்றும் விவசாய ரசாயனத் துறை இருக்கிறது. கடந்த (2018 - 2022) 4 ஆண்டு காலத்தை விட தற்போதைய (2019 - 2023) 4 ஆண்டு காலத்தில் சுமார் 70% குறைவான புதிய வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கப் போகிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: job வேலை
English summary

job opportunities will shrink in coming months team lease report

job opportunities will shrink in coming months team lease report
Story first published: Tuesday, July 23, 2019, 15:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more