டெல்லி: இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணப் பரிமாற்ற நிறுவனங்களில் ஒன்றான Paytm ஒரு புதிய சேவையை அதி விரைவில் தொடங்கப் போகிறதாம். அது தான் கடன். Paytm நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக க்ளிக்ஸ் ஃபைனான்ஸ் என்கிற நிறுவனத்தோடு கூட்டு சேரப் போகிறதாம்.
Paytm-ல் யார் எல்லாம் கடன் வாங்கலாம்..? Paytm வாடிக்கையாளர்களான தனி நபர்கள் முதல் Paytm-ல் தங்கள் பொருட்களை விற்கும் வியாபாரிகள் வரை அனைவருக்கும் கடன் வழங்க இருக்கிறார்களாம். கடனை Deferred Payment முறையிலோ, அல்லது Postpaid முறையிலோ, அல்லது Merchant Lines முறையிலோ வழங்க இருக்கிறார்களாம். இந்த மூன்று முறைகளைப் பற்றி Paytm அதிகம் விளக்கவில்லை.

Proprietary Machine Learning முறையயை Paytm மற்றும் க்ளிக்ஸ் நிறுவனம் இணைந்து மேம்படுத்தி இருக்கிறார்களாம். இதன் அடிப்படையில் தான் தங்கள் லட்சக் கணக்கான Paytm வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு உடனடியாக டிஜிட்டல் கடன் வழங்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது Paytm-ன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்.
"Paytm-ன் இந்த கடன் திட்டங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. Paytm நிறுவனம், க்ளிக்ஸ் நிறுவனத்துடனான கூட்டால், கடன் கொடுப்பதற்காக சோதனை செய்யப்பட்ட அல்காரிதம் அடிப்படையில் எங்களின் பல வாடிக்கையாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் கடன் கொடுக்க இருக்கிறோம்" என Paytm நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் நிதின் மிஸ்ரா சொல்லி இருக்கிறார்.
வரும் மாதங்களில், Paytm வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்திலும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் விதத்திலும், Paytm மற்றும் க்ளிக்ஸ் நிறுவனம் சேர்ந்து இன்னும் பல சேவைகளை புதிதாக கொண்டு வரப் போகிறார்களாம்.
"Paytm மற்றும் க்ளிக்ஸ் ஃபைனான்ஸ் நிறுவனம் சேர்ந்து, இன்னும் பல தனிப்பட்ட, வாடிக்கையாளர்களுக்காக மாற்றி அமைக்கப்பட்ட, எளிமையான செயல்பாடுகளோடு இயங்கக் கூடிய சேவைகளைக் கொண்டு வரப் போகிறோம். அதோடு லட்சக் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காத, பூர்த்தி ஆகாத நிதி சேவைகளை பூர்த்தி செய்யப் போகிறோம்" எனச் சொல்லி இருக்கிறார் க்ளிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ப்ரமொட் பசின் (Pramod Bhasin).
அலிபாபா முதலீடு செய்திருக்கும், இந்தியாவின் Paytm நிறுவனத்துக்கு இதுவரை சுமார் 20 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் சுமார் 6 கோடி சிறு குறு தொழில்முனைவோர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications