வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் அபராதம் ரூ.3,309 கோடி.. RBI தகவல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து 3,309.44 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சேமிப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் எந்த வித வைப்புத் தொகையும் வைத்திருக்கத் தேவையில்லை, எனினும் மற்ற வங்கிக் கணக்குகளில் வங்கிகளுக்கு ஏற்றவாறு வைப்புத் தொகை வைத்திருக்க வேண்டும்.

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் அபராதம் ரூ.3,309 கோடி.. RBI தகவல்!

அந்த வைப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவைக் கட்டணமாக அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறாக கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டு காலத்தில் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு வசூலிக்கப்பட்டுள்ள அபராத கட்டணங்களில், முக்கிய நான்கு தனியார் வங்கிகளில் முறையே கடந்த 2016 - 2017ம் ஆண்டில் 1,115.44 கோடி ரூபாயாகவும், இதுவே கடந்த 2017 - 2018ம் ஆண்டில் 1,138.43 கோடி ரூபாயாகவும், இதுவே 2018 - 2019ம் ஆண்டில் 1,312.92 கோடி ரூபாயாகவும் வசூலிக்கப்பட்டுள்ளதாம்.

இதுவே பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை, 18 பொதுத்துறை வங்கிகளின் அபராத கட்டணம் முறையே கடந்த 2016 - 2017ம் ஆண்டில் 790.22 கோடி ரூபாயாகவும், இதுவே கடந்த 2017 - 2018ம் ஆண்டில் 3,368.42 கோடி ரூபாயாகவும், இது கடந்த 2018 - 2019ம் ஆண்டில் 1,996.46 கோடி ரூபாயாகவும் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட கணக்குகள் உள்பட அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குடன் சேர்த்து, மொத்தம் கடந்த மார்ச் 2019ன் படி 57.3 கோடி வங்கிக் கணக்குகள் இருந்தன.இதில் 35.27 கோடி கணக்குகள் ஜன் தன் கணக்குகளாக உள்ளனவாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banks collect Rs.3,309 crore as minimum balance penalty in last year

Banks collect Rs.3,309 crore as minimum balance penalty in last year
Story first published: Wednesday, July 24, 2019, 18:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X