Cryptocurrency-க்குத் தடை! மீறினால் 10 ஆண்டு சிறை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் Cryptocurrency-களுக்கு தடை விதிக்குமாறும், அதை மீறுபவர்களுக்கு கணிசமான தொகை அபராதத்துடன், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் Cryptocurrency தொடர்பான Inter Ministerial Committee அரசுக்கு பரிந்துரைத்து இருக்கிறதாம்.

பொருளாதார விவகாரத் துறைச் செயலர் சுபாத் சந்திர கார்க்கைத் தலைவராக கொண்டு இயங்கிய இந்த அமைச்சரவைக் கமிட்டியில்,
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சக செயலர்,
செபி அமைப்பின் தலைவர்,
ஆர்பிஐ வங்கியின் துணை ஆளுநர்
நேரடி வரி வாரியத்தின் அதிகாரிகள்...
என பல முக்கிய அதிகாரிகள், உறுப்பினர்களாக பங்கெடுத்து Cryptocurrency குறித்து விவாதித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.

Cryptocurrency-க்குத் தடை! மீறினால் 10 ஆண்டு சிறை!

இந்த கமிட்டி தற்போது இருக்கும் Cryptocurrency-களுக்கு தடை விதிக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்களாம். இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது ஒரு கணிசமான தொகையை அபராதம் செலுத்துவது மற்றும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்குவது குறித்தும் பேசி இருக்கிறார்களாம். அதே நேரத்தில் இந்தியாவுக்கு என ஒரு தனி Cryptocurrency-யை அறிமுகப்படுத்த வேண்டும், அதை ஆர்பிஐ நெறிமுறைப்படுத்த வேண்டும் எனவும் பேசி இருக்கிறார்களாம்.

கடந்த ஜூலை 22, 2019 அன்று மத்திய அரசுக்கு Banning of Cryptocurrency & Regulation of Official Digital Currency Bill, 2019 என்கிற பெயரில் ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் Cryptocurrency-களுக்கு தடை விதிப்பது தொடர்பாகவும், இந்தியாவுக்கு என்று தனியாக ஒரு Cryptocurrency-யைக் கொண்டு வருவது பற்றியும் விரிவாக ஒரு வரைவுச் சட்டத்தையும் சமர்பித்திருக்கிறார்களாம். அடுத்த கட்டமாக இதே கமிட்டி Cryptocurrency-யில் இருக்கும் சிக்கல்கள், நன்மை தீமைகள், அதை வரையறுத்து, நெறிமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறார்களாம்.

தற்போதைய கணக்குப் படி இந்தியாவில் சுமார் 2,100 Cryptocurrency-கள் இருக்கிறதாம். இந்த மொத்த Cryptocurrency-களின் மதிப்பு சுமார் 120 பில்லியன் அமெரிக்க டாலர் இருக்கும் எனவும் மதிப்பீடுகள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே கடந்த ஜூலை 2018-ல் இந்தியாவில் Cryptocurrency-களுக்கு ஆர்பிஐ தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. நம் அண்டை நாடான சீனா, Cryptocurrency-களுக்கு முழு தடை விதித்திருக்கிறது. ஆனால் ஜப்பான், தாய்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் Cryptocurrency-களை அங்கீகரித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: cryptocurrency ban தடை
English summary

Cryptocurrency to be banned 10 years imprisonment for violators new indian Cryptocurrency

Cryptocurrency to be banned 10 years imprisonment for violators new indian Cryptocurrency
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X