டெல்லி : இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த ஜூன் மாதத்தில் 13.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாம்.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரியிலிருந்தே இந்த இறக்குமதி குறைந்தே காணப்படுகிறதாம். கச்சா எண்ணெய் இறக்குமதியில் சர்வதேச அளவில் மூன்றாவது நாடாக இருக்கும் இந்தியாவில், ஜூன் மாதம் இறக்குமதி 16.87 மில்லியன் டன்களாக குறைந்துள்ளது.

இதுவே மே மாதத்தில் 18.87 மில்லியன் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கிட்டதட்ட 10 சதவிகிதத்திற்கும் மேல் குறைவாகும்.
தெஹ்ரான் மீதான தடையை, அமெரிக்கா விதித்ததை அடுத்து ஈரானிலிருந்து, இறக்குமதி ஜூன் மாதம் இறக்குமதி வீழ்ச்சியடைந்துள்ளது. ஆமாங்க.. இது முன்னர் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு எண்ணெய் இறக்குமதி செய்ய
அமெரிக்கா சலுகை அளித்திருந்தது. இந்த நிலையில் இந்த சலுகையும் கடந்த ஏப்ரல் மாதத்தில் முற்றிலுமாக பறிக்கப்பட்டது. இந்த நிலையில் முற்றிலுமாகவே ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.
சீனாவிற்கு அடுத்த படியாக ஈரானின் மிகப்பெரிய வாடிக்கையாளர் இந்தியா தான். இந்த நிலையில் நீண்ட காலபோக்கில் ஒப்பிடும்போது இந்தியா இறக்குமதி அதிகமாகவே செய்துள்ளது. அதிலும் முந்தைய ஆண்டை விட சுமார் 20.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே நேரத்தில் ஏற்றுமதி 11.4 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
எனினும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கடந்த ஜூன் மாதத்தில் ஏற்றுமதி கிட்டதட்ட 6 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 2.22 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. எனினும் நீண்ட கால நோக்கில் இது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மழைகாலம் காரணமாக தேவையும் முந்தைய ஆண்டை விட 9.4 சதவிகிதம் குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
பருவமழை பொதுவாக நீர்பாசன விசையியக்க குழாய்களில் பயன்படுத்தப்படும் டீசலின் தேவையை குறைக்கிறது. இது பொதுவாக எரிபொருளின் ஏற்றுமதியையும் அதிகரிக்கிறது.
இந்தியாவில் கார் சந்தையை பொறுத்த வரையில் பெரும்பாலானோர் பெட்ரோல் வாகனங்களுக்கு திரும்புவதால், டீசல் தேவை குறைந்து வருகிறது.
More From GoodReturns

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

எரியும் நெருப்பில் எண்ணெய்! நயாராவின் 35 நாள் முடக்கம்.. இந்தியாவின் நிலை என்னவாகும்?

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications