போஸ்னியா : மோசடி மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக, இந்திய தொழிலதிபர் பிரமோத் மிட்டல் போஸ்னியா நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆமாங்க.. இந்தியாவை சேர்ந்த ஸ்டீல் மேக்னட் என்ற உருக்காலை அதிபர் லட்சுமி மிட்டலின், சகோதரர் தான் பிரமோத் மிட்டல். இவர் போஸ்னியாவின் லுகாவாக் நகரில் நிலக்கரி தொடர்பான தொழிற்சாலை ஒன்றின் பங்குதாரராக உள்ளார்.

இந்த தொழிற்சாலையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனராம். இந்த நிலையில் மோசடி நடந்துள்ளது என்ற சந்தேகம் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பொருளாதார குற்றம், போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், அரசு வழக்கறிஞர் அறிவுறுத்தலின் பேரில், பிரமோத் மிட்டல், அந்த தொழிற்சாலையின் பொது மேலாளர் பரமேஷ் பட்டாச்சார்யா மற்றும் நிர்வாகி ஒருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நான்காவதாக ஒருவருக்கும் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இதனால் மேலும் ஒருவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 45 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இந்த குற்றம் குறித்து Zurnal.info வலைத்தளத்தின் தகவல் அடிப்படையில், சந்தேகிக்கப்படும் நபர்கள், குறைந்தது ஐந்து மில்லியன் (2.5 மில்லியன் யூரோ, $2.8 மில்லியன்) மோசடி செய்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
உலகளாவிய ஸ்டீல் உலகின் ஜாம்பவான ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி மிட்டல், தனது சகோதரர் பிரமோத் மிட்டலை பிணை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications